பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv மனே விளக்கு

உள்ள செய்திகளை ஆராய்ந்தால் பண்டைக் காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நற்றினையைப் பழங்காலத்தில் தொகுப்பித் தவன் பன்னுடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்ற அரசன். உரை எழுதி அச்சிற் பதிப்பித்தவர் பின்னத்துார் அ. காராயணசாமி ஐயர் என்ற பெரியார்.

சங்க நூல்களிலுள்ள பாடல்கள் இக் காலத்துத் தமிழ் மக்களுக்கு விளங்காத நடையில் இருக்கின்றன. அவற் றைத் தெளிவாக்கினல் அவற்றிலுள்ள பொருள் யாவர் மனத்தையும் கொள்ளை கொள்ளும். இந்த எண்ணத் தில்ை சில அகப்பொருட் செய்யுட்களுக்குக் கதை போன்ற உருவத்தில் விளக்கம் எழுதிக் கலைமக'ளில் முன்பு வெளியிட்டேன். அவற்றை அன்பர்கள் படித்துப் பார்த்து மிகவும் பாராட்டினர்கள். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, காவியமும் ஓவியமும்’ என்ற பெயரோடு ஒரு புத்தகமாக்கி விரிவான முகவுரையோடு வெளியிட்டேன். அப்பால் திருமுருகாற்றுப் படைக்கும் விளக்கம் எழுதி, "வழிகாட்டி’ என்ற பெயரோடு வெளியிட்டேன். இந்த இரண்டு புத்தகங்களும் தமிழர்களின் உள்ளத்துக்கு உவந்தவையாக இருக்கின்றன என்று தெரிந்து இன். மடைகிறேன். முருகன் திருவருளும் என் ஆசிரியப் பிரா னுடைய ஆசியுமே இந்தச் செயலில் யான் புகுவதற்கு மூலகாரணம்ாக நிற்பவை.

இதே முறையில் இன்னும் பல பாடல்களுக்கு விளக்கம் எழுதலாமென்று எண்ணினேன். என் கருத்தை அறிந்து, அப்படிச் செய்வது மிகவும் நன்றென்றும், நான் அதைச் சிறிதும் சோர்வின்றி நன்ருகச் செய்ய வேண்டுமென்றும் வற்புறுத்தி, இவை புத்தக உருவத்தில் வருவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து, என்னைத் தூண்டி நிற்பவர் என் உழுவலன் பினரும், அமுத நிலையத் தின் தலைவரும் ஆகிய பூரீ ரா. ரீ. ரீகண்டன் அவர்கள். இயல்பிலே சோம்பலை அணியாகப் பூண்ட நான் அவர் களுடைய ஊக்கம் இல்லையாளுல் இதை எழுத முற்பட் டிருக்க மாட்டேன். ஆகவே அவர்களுக்கு என் நன்றி யைத் தெரிவிப்பது என் தலையாய கடமை.