பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மன விளக்கு

கடலும் எல்லையற்றுப் பரந்தது. ஆகாயம் பின்னும் விரிந்தது. திசைகள் மிக மிக நீண்டன. இவைகளேயே கடவுளின் திருமேனிப் பகுதிகளாகக் காணலாம்; கண்டு மகிழலாம். .

இறைவன் உலகமாக இருக்கிருன். உலகமே திருமேனியாக அழகு பூத்து நிற்கும் அவனுக்கு லோகசுந்தரன் என்ற திருநாமம் அமைந்திருக்கிறது.

நாம் பிறந்து வாழ்ந்து நடந்து அடங்குவதற்கு ஆதாரமாக நிற்பது பூமி. இந்த மாநிலம் நம்மைத் தாய் போலத் தாங்குகிறது. அகழ்ந்தாலும் உதைத்தாலும் பொறுத்துத் தாங்கும் அருள் தன்மையை உடையது மாநிலம். நமக்கு இருக்கையாகவும் உணவு தரும் களஞ்சியமாகவும் நமக்கென்று பல பொருள்களைத் தன் அகத்தே பொதிந்து வைத்திருக்கும் பெட்டியாகவும் இலங்குகிறது. பூமி இல்லையாயின் நாம் இல்லை; புல் பூண்டு, பயிர் பச்சை, ஆடு மாடு, புலி சிங்கம், மனிதர் யாருமே இல்லை. உலகம் என்ருலே உயிர்க் கூட்டத்தைக் குறிக்கும் பெயராகி விட்டதல்லவா?

இப்படி நம் கண்முன் நமக்கு ஆதாரமாக விரிந்து கிடக்கும் இந்த மாநிலமே இறைவனுடைய சேவடி. தாமரை போன்ற சிவந்ததிருவடி உடையவன் இறைவன் என்று போற்று கிருேம். அந்தத் திருவடி எங்கோ திரு வைகுந்தத்தில் திருக் கோயிலில் மாத்திரமே நிற்பது என்று கருத வேண்டாம். நாம் உணர்ந்தாலும் உணரா விட்டாலும் நம்மைத் தாங்கும் ஆதாரப் பொருள் அது தான். உலகத்தான் அப்பெருமானது திருவடி.

பூமியைச் சூழ்ந்திருப்பது கடல். கடல் இல்லையாளுல் நமக்கு நீர் இல்லை. உலகத்தைச் சுற்றிக் கடல் இருப்ப தல்ை பூமிக்கு அடியில் நீர் ஊறுகிறது. கடல் இருப்பதால்