பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மனே விளக்கு

உலகத்தை நாமும் காண்கிருேம்; அவர்களும் காண் கிரு.ர்கள். நாம் உலகத்தை உலகமாகவே பார்க் கிருேம்; அவர்கள் திருமாலாக, வேத முதல்வகை, எங்கும் நிறைந்த இறைவளுகப் பார்க்கிரு.ர்கள். அவர்களுடைய பெருமையை என்னென்று சொல்வது!

மாநிலம் சேவடி ஆகத் துர்ே வளைகரல் பெளவம் உடுக்கை ஆக விசும்புமெய் யாகத் திசைகை ஆகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக இயன்ற எல்லாம் பயின்று அகத்துஅடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே. * உயிர்க் கூட்டத்தின் தீமைகளெல்லாம் அறும் பொருட்டுத் தன்னுடைய திருக்கரத்திலே சுடர் விட்டு விளங்கிய சக்கராயுதத்தையுடைய திருமாலை. பெரிய நிலத்தைச் செம்மையான திருவடிகளாகவும், தூய நீரை யுடைய சங்குகள் முழங்கும் கடலை ஆடையாகவும், ஆகாயத்தை உடம்பாகவும், திசைகளைக் கரங்களாகவும், தண்மையுடைய கிரணங்களைப் பெற்ற சந்திரனேடு சூரியன் அக்கினி என்ற பிற சுடர்களைக் கண்களாகவும் பெற்று, உலகத்தில் இயற்கையில் அமைந்த எல்லாப் பொருள்களினூடும் இசைந்து நிறைந்து, அவற்றைத் தன்னுள்ளே அடக்கிய, வேதத்துக்கு மூலபுருஷன் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

திகிரியோனை ஆக, பயின்று, அடக்கிய முதல்வன் என்ப என்று வாக்கியத்தைப் பொருத்திக் கொள்ள வேண்டும்.

வளை-சங்கு நரல்-முழங்கும், உடுக்கை-ஆடை. விசும்பு-ஆகாயம். பசுங்கதிர்-குளிர்ந்தகிரணம். இயன்றஇயல்பாக அமைந்த, பயின்று-பழகி நிறைந்து. என்பஎன்று சொல்வார்கள். திதிரியோன்-சக்கரப் படையை உடையவன்.* -