பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 மனே விளக்கு

தின் வழியே அவன் போய்க்கொண்டிருந்தான். அங்கே வெயில் கடுமையாக அடிக்கும்போது தான் மிக மிகத் துன் பம் உண்டாகும். ஆளுல் இப்போது வெயில் தனிந்து கொண்டிருந்தது. மாலேக் காலம் வந்துவிட்டது. அந்தச் சமயத்தில்தான் அவனுக்கு அதிகத்துயரம் உண்டாயிற்று. அவனுடைய நெஞ்சத்தின் உரமெல்லாம் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டது. அவன் அப்பொழுது தன் மனையை நினைத்தான்; மனைக்கு விளக்காகத் திகழும் காதலியை நினைத்தான். இந்தப் பாலே நிலத்தில் தன்னந் தனியே நாற்புறமும் ஜீவனற்ற காட்சிகளே நிறைந்த இடத்தில் அவன் நிற்கிருன். அவன் தன் வீட்டில் இருந் தாளுைல் இந்த நேரத்தில் அவன் காதலி மனேக்கு அழ கைத் தருகிற விளக்கை ஏற்றி அதை வணங்கிவிட்டு, அவன் முன் புன்னகை பூத்தபடி வந்து நிற்பாளே! தலையை அழகாக வாரிப் பின்னி மலரைச் சூடிக்கொண்டு நெற்றி வில் திலகம் இட்டு அந்த விளக்கைக் கையில் ஏந்திச் செல் லும் கோலம் இப்போது நினைத்தாலும் உள்ளத்தைக் கிளரச் செய்கிறது.

இன்று அங்கே தன் இல்லத்தில் அவள் எப்படி இருப் பாள்? அதை உன்னிப் பார்த்தான். அந்தச் சுரத்திலே அவன் உரன் மாயும்படி வந்த மாலைக் காலத்திலே அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது அவள் மனைக்கு மாட்சி தரும் திருவிளக்கை ஏற்றுவாள். ஆளுல் தன் காதலன் அருகே இல்லாமையால் முகம் வாடி அப்படியே உட் கார்ந்துவிடுவாள். அந்த விளக்கைப் பார்த்தபடியே, அவர் எங்கே இருக்கிருரோ! என்ற சிந்தனையில் மூழ்கி யிருப்பாள்.

"இந்த நேரத்தில் அவள் மனை மாண் சுடரை ஏற்றி அதன் முன்னே அமர்ந்து தன் நெஞ்சிலே படரும் நினைப் பில் ஈடுபட்டிருப்பாள் என்று அவன் எண்ணினுன் அவன் அவளே நினைத்தான். அவள் அவனை நினைப்பாள். இப்