பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை iii

யது. பாண்டிய மன்னன் அப்போதைக்கு வடக்கே மணலூர் என்ற இடத்தில் சென்று தங்கினன். "இந்த நாட்டில் கடற்கரைக்கு நெடுந் தூரத்தில் இருக்கும்படி நாமே ஒரு நகரம் புதியதாக அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்ற நினைவு அவனுக்கு உண்டாயிற்று. இறைவன் திருவருளேத் துணைக் கொண்டு ஒரு நகரத்தை நிறுவினன் -பாண்டி நாட்டுக்குப் பழங்காலத்தில் தலை நகரமாக இருந்த மதுரையின் பெயரையே அதற்கு வைத்தான். இந்தப் புதிய மதுரையில் தமிழ்ச் சங்கத்தை யும் நிறுவி வளர்த்து வரலான்ை.

இந்த மூன்று தலைநகரங்களிலும் இருந்த தமிழ்ச் சங்கங்களைத் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என்று சொல்வார்கள். சங்கத்தை அக்காலத்து மக்கள் எவ்வளவு உயர்வாகக் கருதினர்கள் என்பதற்கு அதைப் பற்றிய வரலாறுகளே சாட்சி. சாதாரண மக்கள் கூடிப் பேசும் இடம் அது என்ற நினைவே அவர்களுக்கு இல்லை; தமிழ்த் தெய்வத்தின் திருக்கோயில் அது என்றும், சங்கப் புலவர்களெல்லாம் நாமகளின் அவதாரம் என்றும் நம்பி வழிபட்டார்கள். அதுமட்டுமல்ல; சிவபெருமான், முருகன் திருமால் ஆகியவர்கள் கூடப் புலவர்களாக முதற் சங்கத்தில் இருந்தார்கள் என்று சொல்விச் சொல்வி அதன் மதிப்பை அதிகமாக்கினர்கள். சங்கத் தமிழாக இருந்தது தெய்வத்தமிழாகவும் விளங்க வேண்டுமென்பது அவர்கள் ஆக சி.

இறையனர் அகப்பொருள் என்ற இலக்கண நூலின் உரையில் இந்த மூன்று சங்கங்களின் வரலாறுகளும் வருகின்றன. தலைச்சங்க காலத்தில் தோன்றிய நூல் களில் ஒன்றேனும் இப்போது கிடைக்கவில்லை. இடைச் சங்கத்தில் எழுந்த நூல்களில் தொல்காப்பியத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல வேளையாக, சிறந்த தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமாவது மிஞ்சியதே என்று மகிழ்ச்சியடைய வேண்டும்.

மூன்ருவது சங்கமாகிய கடைச் சங்கத்தில் நாற்பத் தொன்பது புலவர்கள் இருந்தார்களென்று சொல் வார்கள். அக்காலத்தில் புலவர்கள் அவ்வப்போது பல பாடல்களைப் பாடிஞர்கள். அவை தமிழ் நாட்டில்