பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாமத்து மழை 53

தலைவி தோழி, இனி எனக்கு இடையீடில்லாத இன்பம் கிடைக்குமா? அவர் சில காலம் வராமல் இருந் தாரே; நான் என்வளவு துன்பத்தை அடைந்தேன்! தெரியுமா?

தோழி : எனக்குத் தெரியாமல் என்ன? நம் பெருமான் உன்னை மணந்துகொள்ள எண்ணி, அதற்கு வேண்டிய பொருளே ஈட்டத்தான் சென்றிருக்க வேண்டும். அந் தப் பிரிவை நீ தாங்காமல் துன்புற்முய். மழை பெய் யாத பஞ்சகாலத்தில் குளங்களெல்லாம் வற்றிப் போய் நீரே இல்லாமற் போனபோது நெற்பயிர் வாடுவதுபோல நீ வாடிஞய். முளையிட்டு இலைவிட்டு வளர்ந்து பூட்டை விட்ட சமயத்தில் நீர் இல்லாமை யால் வாடிப்போன பயிரைப்போல, அவனுடைய தொடர்பிளுல் மகிழ்ச்சி பெற்ற நீ வாடி நின்றதை நான் பார்த்தேன்; வருந்தினேன். அந்த வாட்டம் பின்னே தீரும் என்று நம்பினேன். உழவன் நெற்பயிர் வாடுவது கண்டு, மேல் மழை வந்தால் இந்தப் பயிர் தழைத்துக் கதிரி முற்றிப் பயன் தருமே!’ என்று ஏங் கிற்ைபோல நான் ஏங்கினேன். 'இவளைத் தலைவன் அருள் செய்து மணந்தால் அறமும் இன்பமும் இவ ளுக்கு வாய்க்குமே!’ என்று நைந்து வருந்தினேன். மழை வருமென்று வானத்தை நம்பியிருக்கும் உழ வனைப்போல நானும் நம்பிக்கையோடு இருந்தேன். பசுமையற்ற காலத்தில் குளங்களெல்லாம் ஈரமற்ற போது, திரங்கிய கெல்லுக்கு இராக் காலத்தில் மழை பொழிந்ததுபோல அவன் வந்துவிட்டான். நள் என்ற யாமத்தில் பெய்யும் மழை அடரப் பொழியும். உன் காதலனும் உன்பால் பேரருளே உடையவளுகி வந் திருக்கிருன் இனி உன்னை இன்பக் கடலில் ஆழ்த்து

வான். நீ வரழி.