பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மனை விளக்கு

கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை முந்துவிளை பெருங்குரல் கொண்ட மக்தி, கல்லாக் கடுவளுெடு கல்வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன் திரைஅணற் கொடுங்கவுள் நிறைய முக்கி, வான்பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் கைஊண் இருக்கையின் தோன்றும் நாடன் வந்தனன் வாழி, தோழி, உலகம் கயங்கண் அற்ற பைதறு காலப் பீளொடு திரங்கிய கெல்லிற்கு கள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே.

  • தோழி, நீ வாழ்வாயாக! குறமகள் பாதுகாக்கும் மலையில் விளைந்த பசிய தினையில் முதலில் விளைந்த பெரிய கதிரை, (அக்குறமகள் அறியாமல் பறித்துக்) கொண்ட பெண் குரங்கு, (இத்தகைய தந்திரத்தைக்) கல்லாத ஆண் குரங்கோடு நல்ல மலைப் பக்கத்தில் ஏறி, உள்ளங் கை நிறைய (அந்தத் தினைக் கதிரைத்) தேய்த்துத் தன்னு டைய சுருங்கிய தாடையோடு, வளைந்த கன்னமும் நிறை யும்படி உண்டு, வானத்திலிருந்து பெய்த மழையில் நனைந்த முதுகை உடையனவாகி, விரதமுடையர் (ஆகிய துறவிகள்) கையில் உண்ணும் கோலத்தில் இருப்பது போலத் தோன்றும் மலை நாட்டையுடைய தலைவன், வந் தான்; உலகத்தில் குளங்களெல்லாம் தம் இடம் வெறுமை யாகி அற்றுப்போன ஈரம் அழிந்த (பஞ்ச) காலத்தில் பூட்டையோடு வாடிப்போன நெற்பயிருக்கு, நள்ளிரவில் மழை பொழிந்தது போல.

தோழி, மந்தி தோன்றும் நாடன், பொழிந்தாங்கு வந்தனன் என்று கூட்டுக.

கொடிச்சி-குறத்தி. அடுக்கல்-மலைத்தொடர். முந்துமுந்தி. குரல்-தினைக் கதிர். மந்தி-பெண்குரங்கு கடுவன்ஆண் குரங்கு. வரை-மலைப்பக்கம். ஞெமிடி-நிமிண்டி;