பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fg மனை விளக்கு

"இக் கலைச் சிடுக்காக்கவா?’’

என்ன, அப்படிச் சொல்கிருய்? சிக்கலை விடுவிக்க நீ வந்து விட்டாயென்று மிக்க மகிழ்ச்சியை அல்லவா அடைந்தேன்?’’

'அது என்ன சிக் கல்?’’

"உன்னுடைய தோழியின் துயரத்தை நீ ஆற்ற வேண்டும்.'

"துயரமா? அவள் இருக்கும் இடத்தில் துயரத்தின்

நிழல்கூட வராதே நீங்கள் இருக்கும் போது, இறைவன்

அருளால் நீங்கள் இருவரும் இன்பக் கடலில் ஆழ்ந்திருக் கும்போது, அவளுக்குத் துயரம் ஏது?"

'சொல்வதை முழுவதும் கேள். நான் பொருள் ஈட்டும்பொருட்டு வெளி நாட்டுக்குப் போகிறேன். சில காலம் உன் தோழியைப் பிரிந்திருக்க நேரும். மாலையில் நான் வீடு வர ஒரு கணம் தாழ்த்தாலும் நான் வரும் வழி மேல் விழி வைத்துப் பார்த்து வாடும் அவள், எவ்வாறு இந்தப் பிரிவைப் பொறுத்திருப்பாள் என்றுயோசித்தேன். போகாமல் இருந்துவிடலாம் என்ருலோ, நான் போய் வருவது இன்றியமையாதது. இந்த யோசனையில் நான் ஆழ்ந்திருக்கும்போதுதான் நீ வந்தாய்.”

'நான் பொருளை ஈட்டித் தருவே னென்று நினைக்கிறீர் களா?' என்று சிரித்துக்கொண்டே தோழி கேட்டாள்.

வேடிக்கை கிடக்கட்டும். பிரிவுக் காலத்தில் என் ஆருயிர்க் காதலிக்கு ஆறுதல் கூறி அவளைப் பாதுகாப்பது உன் கடமை, அதோடு இப்போது உடனே செய்ய வேண் டிய காரியம் ஒன்று இருக்கிறது.”