பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியின் சினம் 79

தலைவி வழியில் போவோரைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டுப் பயன் என்ன? யாரோ ஒருவா எதையோ பார்த்து வருந்தினர் என்று என்னிடம் எதற்காகச் சொல்ல வருகிருய்?

தலைவி வேண்டுமென்றே தோழியின் வார்த்தைகளைக் கவனிக்காதவளைப்போல் காட் டிக் கொள்கிருள். முன்பே தலைவனைத் தெரிந்து கொண்டு பழகிய செய்தியை அவ ளுக்கு மறைக்கிருள். இதுவரையில் அவள் அப்படி இருந்த தில்லை. எந்தச் செயலேயும் தோழியை அறியாமல் செய்த தில்லை. அப்படி இருக்க, இப்பொழுது'மாத்திரம் தோழி சொல்லைக் கேட்கவில்லை.

தோழி தலைவிக்குத் தகாத ஒன்றைச் சொல்வாளா? அவளுக்கு எது நல்லது என்று உணர்ந்து சொல்வதோடு, அதை அடைவதற்கும் துணையாக நிறபாளே உள்ளம் கலந்து பழகிய நட்புடையவர்கள் அவர்கள் இருவரும், அந்த நட்புக் கிடையே இப்போது ஏதாவது வந்து விட்டதா?

ஒருவர் மற்றவரோடு பழகுவதானல், யோசித்துப் பழகவேண்டும். தமக்கு இனியரா, நன்மை செய்பவரா, இடையூறு வந்தால் உதவி செய்பவரா என்று பல வகை யில் நாடி நட்புக்கொள்ளவேண்டும். ஏற்ற நண்பர் என்று உறுதி செய்து நட்ட பிறகு, இவரை நம்பலாமா, கூடாதா என்று ஆராய்வது தவறு. நாடி நட்புக் கொள்ள வேண்டும்; நட்ட பிறகு நாடக்கூடாது.

இப்போது தலைவி, தோழி சொல்வதைக் கவனிக்க வில்லை; அவள் சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதுவரையில் அவர்களிடையே யாதொரு வேற்றுமையும் எழவில்லை. இப்போது தலைவியின் பேச்சில் வேறுபாடு