பக்கம்:மனோகரா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

siri'.5-9] மனோஹரன் 101

lj !

இனி நாம் தாமதிக்கலாகாது. ராஜ சபையில் என்ன நடக்கிறதோ? மஹாராஜா இனங்காவிடின், மனோ ஹரன் அவரையும் கொன்றாலுங் கொன்று விடுஇான் வந்தது வரட்டு மென்று. ஐயோ! நான் என்ன செய்வது? இப்படிப் பார்த்தால் புதல்வன், அப்படிப் பார்த்தால் புருஷன். ஆம், அவர் என்னை எப்படி வருத்திய போதும், புருஷன் புருஷன்தான். நான் அவருடைய பத்தினிதானே! ஐயோ! இந்தத் தர்மசங்கடத்திற்கு நான் என் செய்வது? இரண்டு பாம்புகளுக்கு இடை யிலகப்பட்ட தேரைபோலானேனே!-ஆம், ஆம், இப் பொழுது நம்முடைய சபதத்தையெல்லாம் பார்த்தால் முடியாது! எப்படியும் நான் ராஜசபைக்குப்போக வேண்டும். எதனாலும் முடியாமற்போனால், நானா வது அவர் காலில் வீழ்ந்து வேண்டிப்பார்க்கிறேன். அதிலும் அவர்மனம் இளகாமற் போகுமோ பார்ப் வோம் நான் ஒருவருமறியாதபடி எண்துருவத்தை மறைத்துச் செல்லவேண்டும்!-ஈசனே ஈசனே! இப்படி யும் என்மீனே நிலைமையைப் பரீட்சிப்பீரா?

(விரைந்து போகிறாள்.)

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/110&oldid=613511" இலிருந்து மீள்விக்கப்பட்டது