பக்கம்:மனோகரா.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மனோஹரன் காட்சி-5

விட்டது! என் மனவுறுதியைக் கலைக்கர் தீர்! சீக்கிரம்!

அரசே, என் வாளைக் கையிலெடுக்கவும் எனக்கிப் பொழுது சக்தியில்லை. ராஜகுமாரா! வேறு 'யுக்தி யில்லையோ இச் சங்கடத்தினின்றும் தப்புவதறகு? நீர் தப்பி இந்நாட்டை விட்டுச் சென்று பிழ்ைக்கலாகாதோ மாறுவேடம் ஆண்டு? மஹர் ஜாவின் கோபத்திற்கு வேண்டுமென் றால் நான் பாத்திரனாய் என்னுயிரைக் கொடுக்கிறேன். மஹாராஜா ஏதோ மதி மயங்கி யிருக்கிறார் என்பதற்குச் சிறிதும் சந்தேகமில்லை. சீக்கிரத்தில் தமது தவறைத் தாமே காண்பார். அப் பொழுது நீர் உயிருடன் இருப்ப்தைக் கேள்விப்படுவா ராயின், எப்படியும், மிகவும் சந்தோஷ்ப்யூட்டு உம்மை வரவழைத்துக்கொள்வார். நான் சொல்வதைக் கேளும்,

சத்தியசீலரே! இதெல்லாம். வீண் வார்த்தை அந்தப் பாதகி வசந்தசேனை உயிருட்னிருக்குக்ளவும் மஹா ராஜாவுக்குப் புத்தி திரும்பாது நான்த்ர்ல் அவள்மீது பழி வாங்க அசக்தனாயிருக்கிறேன் ! இனி நான் உயிரோடிருப்பானேன்? என் தந்தைதான் நான் அவரது மகனல்லவென்று சபையறியக் கூறிவிட்டார். இப்படி கூறிய தன் புருஷனே மேலெனக் கருதி என் தாயாரும் அவர் சொற்படி நான் இறக்கவேண்டியதுதானெனச் சற்றும் மனங் கூசாமல் கட்டளையிட்டுவிட்டார்கள்! பிறகு யார் பொருட்டு நான் உயிர் வாழ்வது? விஜயா இருக்கிறாள், நீர் இருக்கிறீர், ராஜப்பிரியனிருக்கிறான், -சத்தியசீலரே! இவைகளையெல்லாம் இப்பொழுது யோசித்துப் பயனென்ன எடும் வ்ாளை1.

ஈசனே! ஈசனே இதுவும் உமது திருவிளையாட்டோ!

'அழுகிறார்.1 என்ன ஐயா! அழுதுகொண்டிருக்கிறீர்கள் எடுக் வாளை! என்னைக்கொல்கிறீரா என்ன இப்பொழுது? அரசே, உமது கட்டளைப்படியே ஆக்ட்டும் ஆயினும் நீர் இறப்பதன்முன் எனக்கு ஒரு வர்ம் கொடுக்க மாட்டீரா ջ ஐயா! நல்ல சமயம் பார்த்தீர் என்னை வரம் கேட்க! இப்பொழுது தமக்குக் கொடுக்கும்படியா என்னிடம் என்ன இருக்கிறது? என்னால் இந்த ஸ்திதியில் கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/125&oldid=613541" இலிருந்து மீள்விக்கப்பட்டது