பக்கம்:மனோகரா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22

நீ !

to #

虏1

மனோஹரன் காட்சி-6

தீலவேணி வருகிறாள். அம்மா, மஹாராஜா வாயிலில் வந்திருக்கிறார்! தம்மைப் பார்ப்பதற்காக உள்ளே வரலாமா வென்று கேட்டுக் கொண்டு வரச் சொன்னார்! -

யார்? மஹாராஜாவா!

ஆம், அம்மா, உண்மையாகத்தான். அம்மணி, இனி நீங்களும் அவரும் ஒருமித்த மனமுடையவராய்ச் சுகமாய் வாழ்வீர்களாக! ஏதோ மஹாராஜாவினுடைய மனம் திரும்பியிருக்கிறதென்பதற்குத் தடையில்லை.

மஹாராஜா என்னை இங்குப் பார்ப்பதாவது! ஆம், அம்மணி, நான் அவரை உள்ளே வரச்சொல்லவா?

வேண்டாம்! இப்பதினாறு வருடங்களாக என்னைப் பாராதவர் இவ்வளவு தூரம் நடந்த பின்பு இனிமேல் பார்க்கப்போகிறாரோ? வேசியாகிய என்னை அவர் பார்க்கவேண்டிய நிமித்தமில்லை. ஒருவேளை வழிதவறி வந்திருப்பார். அவளுடைய மாளிகை தென் பாகத்தி லுள்ளதென அதற்கு வழி காட்டு, போ!

அம்மா, இதென்ன? அவராக வேண்டி வரும்பொழுது

தாமிப்படி பிடிவாதம் செய்யலாமா ?

நீலவேணி! நான் சொன்னபடி சொல், போ!

(நீலவேனி போகிறாள்).

இதென்ன ஆச்சரியமாயிருக்கிறது! மஹாராஜா இங்கு வருவானேன்? இதிலெல்லாம். ஏதோ இருக்கிறது.-- மனோஹரன் உயிருடன் இருக்கிறானென எனக்குள் ஏதோ சொல்லுகிறது; அவ்வண்ணம் தப்பியிருந்தால் நம்மிடம் வந்து சொல்லாமல் எங்கேயாவது போயிருப் Litr(367 fr ?

நீலவேணி மறுபடியும் வருகிறாள்.

அம்மா, தான் என்ன,சொல்லியும் போகமாட்டேனென் கிறார். எப்படியாவது தம்மைக் காணவேண்டுமென்

கிறார். வரச் சொல்லவா? அம்மா, அவர் அவ்வளவு

வேண்டிக் கேட்கும்பொழுது தாம் பாரா திருத்தல் தர்மமோ ? - - * . . . *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/131&oldid=613553" இலிருந்து மீள்விக்கப்பட்டது