பக்கம்:மனோகரா.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) மனோஹரன் 139

தன்னையே குத்திக்கொண்டு இறந்து விட்டார்கள் மஹாராஜா, எங்கள்மீது யாதொரு குற்றமுமில்லை!--

Կ ஆம்! உங்கள் மீது குற்றமில்லை! சரி, என்னைக் கொல்ல வந்தவள் தெய்வாதீனத்தால் வசந்தனையே கொன்று விட்டனள்!-வசந்தசேனை! உன் கெடுமதிக்குத் தக்க தண்டனையே உனக்குத் தெய்வ கடாட்சத்தால் விதிக்கப்பட்டது. இதுவரையில் என் மைந்தனென எண்ணியிருந்த வசந்தனும் இறந்தான்!-அவர்கள் வந்த வேலை அவ்வளவுடன் முடிந்தது!-அமிர்தகேசரி, விசடா, உடனே சென்று ரணவீரகேதுவை வரவழைத்து, நமதரண்மனைத் தாதியர்களைக்கொண்டு, த க் க மரியாதையுடன், இவ்விரண்டு சவங்களையும், ஒன்றா யெடுப்பித்து, அரண்மனையின் தெற்கு மூலையில், தீ வளர்த்தி தகனம் செய்து இம்படி, நான் கட்டளை யிட்டதாகச் சொல்லுங்கள் புறப்படுங்கள் உடனே.

(இருவரும் போகிறார்கள்}

வசந்தசேனை! சற்று முன்பாக எவ்வளவோ யுக்தி களெல்லாம் செய்த உனது மூளை ஓய்வுற்று அடங்கி யிருக்கிறதோ? - ஆயினும்-எனது மனைவியைப்போல் சிலகாலம் வாழ்த் திருந்த ய், இறந்த பின்னும் தக்க மரியாதையுடன் செல்வாய்-நீ செல்ல வேண்டிய இடத்திற்கு!-உலக வாழ்வு இதுதான்! (வெளியில் யுத்த பேரிகை முழங்குகிறது.) என்ன இந்தச் சமயத்தில் யுத்தபேரிகை முழங்குகிறது! என்ன சமாசாரம்?

விரைந்து போகிறார்.1

காட்சி முடிகிறது

శ్రీ

స్థా

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/148&oldid=613588" இலிருந்து மீள்விக்கப்பட்டது