பக்கம்:மனோகரா.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3 மனோஹரன் 151

፴ፓff ;

பெள :

(அரசனிடம் விடை பெற்று நால்வரும் ஒரு புறமாகப் போய் மெல்லப் பேசுகிறார்கள்)

(தனக்குள்) ஐ ஐயோ! இதென்ன சங்கடம்! பத்மாவதி இதற்கிப்பொழுது சம்மதிப்பாளோ? நான் யுத்தத் திற்குப் போகும்பொழுதும் பாரேனென்றவள் இப் பொழுது என்னுடன் சிம்மாசனத்தில் உட்கார இசை வாளோ? இந்ததி தர்ம சங்கடத்திற்கு என் செய்வது? முடியாதென்றால் என்னுயிரையும் ராஜ்யத்தையும் காத்த இவ் வீரர்கள் கோபங்கொண்டு செல்வார்கள். நான் உபகாரம் செய்தவர்களுக்கு அபகாரம் செய்த வனாவேன்! ஐயோ! இதற்கு நான் என்ன செய்வேன்? தெய்வமே கதி! ஆயினும் இவர்கள் நமது சபைக்காவது வரட்டும். பிறகு வேண்டிப்பார்ப்போம்.

நான் அப்பொழுதே சொன்னேனே! எதற்கும் பார்த் தலே நலம். இப்பொழுது பார்த்தீரா என்ன நன்மை யாக முடிந்தது!

ஐயா, அதெல்லாமிருக்கட்டும், பத்மாவதிதேவி செய் திருக்கும் பிரதிக்ஞையைத்தான் கூறியிருக்கிறேனே இப்பொழுது தமது தாயார் நீர்தான் வரம்போகிறீ ரெனவறிந்து மஹாராஜா சென்று கேட்கும்பொழுது இதற்கிசையச் செய்வதெப்படி? இவ் விஷயங்களெல் லாம் அறியா விட்டால் பத்மாவதிதேவி இதற்கு ஒரு காலும் இசையார்கள்; இதற்கெற்கென்ன யு க் தி சொல்லுகிறீர் ?

நாம் யாராவது சென்று பத்மாவதிதேவிக்குமாத்திரம் நடந்த வரலாற்றை அறிவித்தாலோ? முன்பே சிலர் சந்தேகங் கொண்டிருக்கிறார்கள், மஹாராஜா இதைக் குறித்து சந்தேகிக்காவிட்டாலும்.

ஆம்! ஆம்! அதுதான் நல்லவழி, ராஜப்பிரியா, நீயே தகுந்தவனிதற்கு நீ அரண்மனைக்குள் ஒருவருமறியாத படி நமது சுரங்கத்தின் வழியாகப்பிரவேசித்து, விஜயா விடம் சென்று உண்மையைக்கூறி, அவளைக் கொண்டு மெல்ல என் தாயாருக்கு இவைகளையெல்லாம் கூறி. ஒருவேளை நான் தான் வருவேனெனச் சொல்லி, மஹாராஜர்வுடன் நாளைக் தி ன ம் அந்தச்சேர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/160&oldid=613613" இலிருந்து மீள்விக்கப்பட்டது