பக்கம்:மனோகரா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத் :

பத் !

சத் :

மனோஹரன் (அங்கம்-1

அம்மா, தாங்கள் ஒன்றும் அதைரியப்படவேண்டாம்:

மஹாராஜா நமது பட்டணத்தெல்லைவரையில் வந்து இளவரசரை வெற்றி பெறுவாயென ஆசீர்வதித்தனுப் பினார்.

அப்படியா?

அம்மா, விஜயா. நீ வருந்துதலொழி, உன் கணவன் இன்னும் எட்டு தினங்களுக்குள் வெற்றி வீரகண்டை யணிந்து திரும்பி வருவதாக உன்னிடம் கூறும்படிக் கட்டளையிட்டார். தன் அடையாளமாக இக்கனை யாழியைக் கொடுத்து இதிலிருக்கும் வைரங்களைக் தினமொன்றாகக் இனக்கிட்டுக் கொண்டிருந்தால் இதற் குள்ளாக வந்துவிடுவதாகச் சொல்லும்படி கூறினார்.

(விஜயர்விடம் ஒரு மோதிரத்தை கொடுக.கறாா.1

எனக்கேதாவது கூறும்படி சொல்லினனோ?

ஆம், அம்மா அப்படியொன்றும். நேராதென்பதற்குச் சந்தேகமில்லை. ஆயினும் தனக்கு ஏதேனும்கெடுதிநேரிடும் பட்சத்தில், தாம் அவருக்குக்கொடுத்த உடைவாளை அறி குறி. அனுப்புவதாயும், அதை விஜயா தரித்திருச்சிை கரு மகனாகப் பிறக்குமாயின், அவனிடம் கொடுத்து, அவனைக் கொண்டு தமது சபதத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படியாகவும் மிகுந்த வணக்கத்துடன் கூறும்படி உத்தரவு செய்தார் எனக்கு. தாம் ஒன்றும் பயப்படி வேண்டியதில்லை அம்மணி, அதிவீரசேர மஹாராஜ னுடைய வயிற்றிற் பிறந்த தமக்கு நான் என்ன தைரியம் சொல்லப்போகிறேன். ஆயி னும் மனோஹரருடைய விரதிரம் தமக்குத் தெரியாது. நேரிற் கண்டிருக்கும் எனக் குத்தெரியும். அதை நான் கண்ணாரக் கண்டு மகிழ்வதற் கில்லையே இம்முறை, என்று மாத்திரம் எனக்கு வருத்த மாயிருக்கிறதேயொழிய வேறொன்றுமில்லை,

ராகம் கமாஸ் தானும் ரூபகம்.

பல்லவி நானோ புகழ யோக்கியன்

நாயக மிவனை? - (தா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/17&oldid=613263" இலிருந்து மீள்விக்கப்பட்டது