பக்கம்:மனோகரா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

айя:

மனோஹரன் |அங்கம்-1)

அண்ணா! இதுக்குள்ளே மறந்தாட்டைங்களா? நான்தான் உங்க தம்பியாச்சே?

தம்பியாவது? நீ எப்படி எனக்குறவு! நீயார்?

எப்படி உறவா ? இதுக்குள்ளே மறந்துாட்டைங்களே அண் ணா! உங்க பாட்டனுக்குப் பாட்டனெயும் என் பாட்ட னுக்குப் பாட்டனெயும் ஒரே புலி முழிங்கூட்டுதே. மறந் துாட்டைங்களா? நீங்கதான் ம றந்தட்டாலும் நான் மறக்க மாட்டேன் நம்பளுடைய சொந்தத்தே!

ஐஐயோ! அப்படியொன்றுமில்லை. நான் உன் பந்து வல்ல, எனக்குன்னைத் தெரியாதே! தெரியாதே?

இல்லெ, இல்லெ நீங்க என் அண்ணா தான்! நான் விடவே tanrı:Gı-sir!

ஐயோ சனி!-என்னை விடப்பா! நீ என் தம்பிதான், விடு விடு:-இதென்ன ப்ெரிய இழவாக இருக்கிறது!-அப்பா. இந்த அரண்மனையில் உனக்கென்ன வேலை?

அந்த வேலெயெயேன் சேக்கரைங்கோ? சின்ன ராணிக்கு ஒரு புள்ளெஇருக்கிறாரு பெரிய பயித்தியம்! அவரோடெ எப்பவும் இருந்துக்கினு அவர் ஒருத்தருக்கும் கெடுதி செய் யாமலிருக்கும்படி பாத்துக்கிறது.

அவர் என்ன எல்லோரையும் அடிக்கிறாரா என்ன?

அந்த எழவெ கேக்காதைங்கோ யாரானாலும் புதுசா வந்தா போதும்: பாத்துட்டாரோ யமலோகந்தான்!

அப்படியா?

ஆமாம். நீங்க என்னாத்துக்கு வந்தைங்கோ அண்ணா ?

அந்த ராஜகுமாரருக்கு வயித்தியஞ் செய்ய வந்திருக்கிறேன், சின்ன ராணியின் உத்தரவுபடி, அப்பா, நீ சொல்லும்படி யான அவ்வளவு துஷ்டராயிருந்தால் நான் என்ன செய்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/30&oldid=613302" இலிருந்து மீள்விக்கப்பட்டது