பக்கம்:மனோகரா.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) மனோஹரன் 41

வி :

{o} {

frrr :

irft :

tr mr :

grrr :

டிம்-உம் இருக்கும். ராஜப்பிரியா! சீ! உண்மையைக் கூறு:

ஒன்றுமில்லையம்மா, தாம் வருந்தவேண்டாம். வேடிக் கையாக, வீரலட்சுமியை மணந்தாரெனக் கூறினேன். அந்த சக்களத்தி உமக்கு ஒரு தீங்குஞ் செய்யமாட்டாள்! வருந்த வேண்டாம். (எல்லோரும் நகைக்கிறார்கள்)

ராஜப்பிரியா, ஆகட்டும், உனக்கும் விவாகமாகட்டும், உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்!

என்னையா? நான் கலியாணஞ் செய்து கொள்ளுங் காலத்தில் பார்த்துக்கொள்வோம். உம்மைப் போலவா நான்? மையிட்ட கண்ணினின்றும் தண்ணி வந்தால் உமது வீரமெல்லாம் எங்கேயோ மறைந்து போய்விடு கிறதே? இல்லாவிட்டால் முத்துவிஜயபாண்டியன் மருமகள் காலில் வீழ்ந்தழுதாளென்று, சத்ருவின் குமாரன் என்றும் பா ர | ம ல் , உக்கிர குலசேகர பாண்டியனுக்குப் பட்டங் கட்டி விட்டு வருவீரா நீர்,

கண்ணே அப்படியா செய்தாய்? மிகவும் சந்தோஷம் அது தான் சுத்தவீரனுக்கு லட்சணம்! பகைவரைப் பொறுப்பதே மேன்மை.

சரி, அவருடைய அன்னையல்லவா. தாங்கள்! என்ன அப்பா இப்படி பகைவருடன் உறவாடலாமா என்று கண்டிப்பதை விட்டு, சபாஷ் என்று தட்டிக்கொடுக் கிறீர்களே!

ராஜப்பிரியா, முத்துவிஜயன்தான் நமக்கு விரோதி, அவன் குமாரன் நமக்கொரு கெடுதியும் செய்யவில் லையே, அவனையும் ஏன் தண்டிக்க வேண்டும் ?

இப்பொழுது ஒரு கெடுதியும் செய்யவில்லை, இனிமேல் செய்யப்போகிறான். இப்பொழுதே சொன் னே ன் பாரும், பாம்பின் வயிற்றில் பாம்புதான் பிறக்கும்.

அதெல்லாமிருக்கட்டும்-சத்தியசீலரே, நாங்களிங்கு வந் திருக்கும் சமாசாரம் மஹாராஜாவுக்குத் தெரிவிக்க

வேண்டியதில்லை. நாளைத்தினம் சபையிலே மஹா ராஜாவை நான் காண்பேன்,

அப்படியே ஆகட்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/50&oldid=613359" இலிருந்து மீள்விக்கப்பட்டது