பக்கம்:மனோகரா.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மனோஹரன் (அங்கம்-21

செல்கிறார்கள். ஆ! நான் இன்றைக்கெழுந்த வேளை என்ன வேளையோ? சிம்மாசனத்தின்மீது மஹாராஜா வுடன் உட்கார்ந்ததும் போதும், நான் பட்ட பாடும் போதும். ஒவ்வொரு வினாடியும் எங்கு என்னுயிர் போகிறதோ என்றல்லவோ நடுங்கியிருந்தேன். மனோ ஹரன் கரத்தினின்றும் இரண்டு முறை நான் தப்பியது தெய்வாதீனந்தான். சிம்மாசனத்திலுட்கார்ந்திருந்த பொழுதும் எரி நெருப்பின்மீதில் உட்கார்ந்திருந்தால் எவ்வளவு சுகமனுபவிக்கலாமோ அவ்வளவு சுகமனுபவித் தேன்! அ து போனாற்போகட்டும்.-இப்பொழுது என்னையுமறியாதபடி என் வாயில் என்ன சொல் வந்து விட்டது! சீ! என் புத்தி காலையில் நான் பட்ட சங்கடத் தினால் மழுங்கிற்றென்றே நினைக்கிறேன்! இல்லா விடின் மனோஹரனை வேசி மகனென்னபேனோ? பத்தினியாகிய பத்மாவதியை இவ்வாறு சொல்லு வேனோ? வசந்தனைப்பார்த்து வேசி மகனெனக் கூறின் அது உண்மையாயிருக்கும்! என் சமாசாரத்தைப் பிறர் மேல் அறியாதபடி கூறிவிட்டிருக்கவேண்டும்! என்ன மூடபுத்தி!-இ ப் .ெ பா ழுது இவைகளையெல்லாம் யோசித்து வருத்தப்படுவது குணமறுை மஹாராஜா வோ மிகவும் கோபங்கொண்டு போயிருக்கிறார். கோப மிராதோ பிறகு.?-இப்பொழுது உடனே நான் சென்றால் கோபம் அதிகரிக்குமேயொழிய தணியாது. சற்று அது வாகத்தணிந்த பிறகு செல்லவேண்டும். ஏது, இனி எல்லாம் சங்கடமாகத்தான் முடியும்போலிருக்கிறது! மனோஹரன் இரண்டு முறையும் நீறுபெற்ற சர்ப்பம் போலடங்கிச் சென்றான் என்னவோ விசேஷம் தெரிய வில்லை-சீ! அவசரப்பட்டு ஒரு வார்த்தை சொல்லி விட்டுப்பிறகு அதன் பொருட்டு எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கவேண்டியிருக்கிறது! (போகிறாள்.

காட்சி முடிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/71&oldid=613419" இலிருந்து மீள்விக்கப்பட்டது