பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 தோழி: அம்மா!... அம்மா !.சொன்னா கேட்டாத் தானே !...... வர்மன்: சேனா! தோழி: மறுபடியும் மயக்கம் வந்திடுச்சுங்களா? வர்மன்: அப்போது இதற்கு முன்பும் ? தோழி: என்னங்க எஜமான்... தெரியாத மாதிரி பேச நீங்க. அம்மா !... இன்னும் ஒன்பது மாசத்திலே ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகுது வர்மன்: ஆஹா... சேனா கர்ப்பிணி. நாடகம் பார்க்கும் ராஜப்பிரியன்: அப்படியானால் தன் யார் மகன் ? சத்யசீலர்: நாடகத்தைப் பார்! ராஜப் : நாடகமா? நடந்ததா? நாடகத்தின் அடுத்த காட்சியாக அர சன் உத்தம புருஷனும் தேவசேனாவும் காதல்பாட்டு (நிலாவிலே! பமே!! பாடுகின்றனர்.) கமலாவதி: உம்... நகர சோதனை இன்று முடியவில்லை போலிருக்கிறது சல்லா சீக்கிரத்தில் ராஜா: ஆம்...ஆம்... நேரம்தான் ஆகிவிட்டது...வழியில் எதிர்பாராத ஒரு வேடிக்கை... கமலாவதி: வேடிக்கையாகத்தானிருக்கிறது உங்கள் பேச்சும்... இங்கு நான் விழித்துக்கொண்டிருப்பதுகூட உங்களுக்கு எதிர்பாராத ஒரு வேடிக்கையாகத்தான் இருக்கிறது... ஸ்வாமி நகர சோதனைக்கா இந்த நாகரீக உடைகள்?... நல்ல வாசனை !... ஜவ்வாதுப் பொட்டு!..ஓ!.. மாப்பிள்ளை மணவறையிலிருந்து இப்போது தான் திரும்புகிறீர்கள் போலிருக்கிறது தங்களின் புது மணமகள் யார்தான் ஸ்வாமி ? ராஜா: நாவை அடக்கிப் பேசு.. போ அப்புறம் கமலா: உங்களை இவ்வளவு கேவலமாகவா விட்டது. அந்த சண்டாளியின் சகவாசம். மாற்றி