17 வர்மன் : நீ சொல்லும்போது எனக்கென்ன பயம்? சேனா இப்படி வா...... என் கையால் உனக்குப் பாலைக் கொடுத்து ரொம்ப காலமாயிற்றல்லவா ?... சேனா: ஆமாம்...அதெல்லாம் கலியாண புதிதில்... வர்மன்: சீ...அப்படிச் சொல்லாதே குடி சேனா: தேவாமிர்தமாயிருக்கிறதத்தான்! வர்மன்: சரி...அதைக் கொடு. நானே குடிக்கிறேன். சேனா : ஏனாம். நானதான் கொடுப்பேன். உம்.. நாடகம் பார்க்கும் வசந்தன்: வேண்டாம்! வேண்டாம் விஷம்!" சேனா: ஹா ஹா ஹா ... விஷம் வேலை செய்கிறதாக்கும்... புத்திசாலிகளின் போக்கே இப்படித்தான்... வர்மன்: அடி...ராக்ஷஸ் !...சோரம் செய்தது போதா தென்று சொந்தப் புருஷனையும் மருந்திட்டுக் கொல்லு கிறாய்? ஆ சேனா : உன்னால் நான்பட்ட துன்பங்கள் ஒன்றா, இரண்டா? என் உயிர்க் காதலன் ருத்ரசேனனிடமிருந்து என்னைப் பிரித்தாய்? இப்போது என் கருத்து பூத்துக் காய்த்து கனியாகும் நிலைமையிலிருக்கிறது...உன்னை உயி ரோடு வைத்திருந்தால் வேரையல்லவோ வெட்டிப் போடுவாய்? அதனால்தான் நான் முந்திக்கொண்டு விட்டேன். உன் தலைவிதியைத் தடுக்க யாரால் தான் முடியும்? மனைவியின் மனதறிந்து நடக்கத் தெரியாத மடையன்களுக்கெல்லாம் இதே கதிதான் எந்தக் காலத்திலும்... வர்மன் சாகிறான், நாடகம் காணும் வசந்தசேனை கூச்சலிடுகிறாள் நிறுத்தச் சொல்லி! (ஒலி கேட்கிறது) கணவனைக் கொன் காட்டாற்றில் உருட்டினாள் றாள்! ...
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை