22 மனோ: பரம்பரைக்கேற்பட்ட களங்கம் பாண்டியன் முத்துவிஜயனால் மட்டுமல்ல பாதகி வசந்த சேனையா லுந்தான்! ஏமாந்த காலத்தில் வெற்றி முரசு கொட்டிய வெறியனை மட்டுமல்ல உங்கள் இன்ப வாழ்வில் குறுக்கிட்ட வஞ்சகியையும் வீட்டுவைக்காது இந்த வாள் ! பத்: முதலில் நான் சொன்னதைச் செய்! மனோகரா! அப்பாவிடம் அனுமதி பெற்றுவா ! (தெருவில் முரசறையப்படுகிறது. முரசறைவோன்: போர்! பயங்கரமான போர்!நமது நாட்டின் மானத்தை - எதிர் காலத்தை நிர்ணயிக்கும் போர் ! வீரர்களே தயாராகுங்கள்! வீட்டுக்கொருவர் புறப்படுங்கள் - வீணர் எலும்புடைப்போம் - வெற்றிக் கொடி பிடிப்போம். வாரீர்! வாரீர் ! போருக்கு !.. போர்! போர்! போர்! டம் டம் டம் 1
வசந்தன்: போர்! போர் ! வீராதி வீரர்களே ! கிளம்புங் கள் போருக்கு ! போரிலே இரண்டு வகை உண்டு. ஒரு போரிலே மாடுகள் மேயும். அது வைக்கோற் போர்! இன்னொரு போர் வெறும் அக்கப் போர்! நான் சொல்லும் போர், மண்டைகள் உடையும் சண்டையைப் பற்றி ! புலிக்கண் வீரர்களே! சிங்கங் களே! சிறுத்தைகளே! செம்மறி ஆடுகளே ! சிறிக் கிளம்புங்கள்!உம்,புறப்படுங்கள்.ஏன்நிற்கிறீர்கள்! வெட்டுங்கள் வீழ்த்துங்கள்! கொல்லுங்கள்... குட லைக் கிழியுங்கள்.... (வீரர் பொம்மைகள் இப்போது காட்சி யாகின்றன.] - கடன்: சபாஷ் ! வசந்தன் - நீ வீரனே தான். வசந்தன் : சந்தேகமில்லை... சந்தேகமில்லை (என்று வாளை உருவுகிறான்.கையில் வாளின் பிடி மட்டும் இருக்கிறது.......