பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தட்டுப்படாமல்போன பகைவர்களில் ஒருவன்-பாண் டிய நாட்டு வீரன்! மனோ: பாண்டிய நாட்டு வீரன்! உம்...பாதி ராத்திரி யிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்து வி ஐயன் ஆட்சியிலே முதல் இடம் போலும், முது கெலும்பில்லாதவனே.கையிலே வாளும், நெஞ்சிலே கோழைத்தனமும் கொண்டவர்களில் ஓருவன் மிச் சமா? ஓடிப்போ... உயிரைக் காப்பாற்றிக்கொள்... ராஜப்பிரியன்: மனோகரா!... இவனை விடக்கூடாது. மனோ போகட்டும் பாவம்...மன்னித்துவிட்டேன் விஜ; மன்னிப்பு கேட்கும் மரபல்ல... மனோ : மறைந்திருந்து தாக்கும் மரபு. மாவீரன் ! ராஜ் : தூங்குபவன் தலையைத் துண்டாடுபவர்களும் வீரர்கள்தான், பாண்டியநாட்டுப் பள்ளிக்கூடத்திலே! போடா போக்கற்ற கோழையே! விஐ, கோழை..நானா கோழை! இதோ பார்... இப் பொழுதே நேராகவே பழிதீர்த்துக்கொள்கிறேன். [வாளை உருவுகிறாள். மனோகரன் அவளைத் தடுக்க அப்போது அவள் தலைப்பாகை நழுவுகிறது.] மனோ : 1 பெண் ! விஜ உன் பகைவரின் பெண்... பழிவாங்க வந்தவள்... ராஜ: இளவரசி! மனோ : அற்புதமான காட்சி, வளையல்

களிலே வாள் ! ஏந்தும் கை விஜ : பேசாதீர்!... நீர் வீரனானால் என்னை ஜெயித்த பிறகு பேசும்! மனோ : வேல்விழி மாதர்களிடம் வீரர்கள் ஜெயித்தார் கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது, இளவரசி ! விஜ: கேலி தேவையில்லை. எடும் வாளை,