பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 (அரசர் அறை வசந்தசேனையின் தோழி கதவைத் தட்டுகிறான்] தோழி: மகாரா ஐ ா... மகாராஜா ஆபத்து.. கதவைத் திறங்க மகாராஜா...கார்யம் கெட்டுவிடும்... ஆபத்து மகராஐா அரசர்: என்ன இது? தோழி: மகாராஜா! அய்யோ... அர: சொல்லு விஷயத்தை. தோ: வசந்த சேனையம்மா... தூக்கு போட்டுகிட்டு அர : ஆ!

தோ: சாகப் போறாங்க.. சீக்கிரம் போனாத்தான் காப்பத் தலாம்... அர எங்கே? தோ: இந்தப் பக்கம்தான போனாங்க. அம்மா வ அய்யோ... ஓடுகிறார்கள்.ஒரு மரத்தடியில் வசந்த சேனை தூக்கும் போட்டுச் கொள்ள எத்தனிப்பவள் போல் நிற் கிறாள்) வ.சேனை : ஆண்டவனே அடியாளை உன் திருவடி களிலே ஏற்றுக் கொள். அரசன் மீது நான் காட்டிய விஸ்வாசமெல்லாம் விழலுக்கிரைத்த நிராகிவிட்டது.. அவர் மேல் குற்றமில்லை என் விதி- நான்தானே அனுபவிக்க வேண்டும். அரசர் : சேது ! சேனா? (ஓடி வருகிறார்) வசந்தி ! என்ன காரியம் செய்தாய்... இது என்ன பைத்தியக்காரத் த தனம் வ.சே: இல்லை. உண்மைக் காதலுக்குக் கிடைத்த பரிசு மகாராஜா...இனி நான் ஒரு க்ஷணமும் உயிரோடிருக்க விரும்பவில்லை. உங்கள் கண்ணெதிரிலேயே கண்ணை மூடுகிறேன். அதுவே எனக்குப் பேரானந்தம் பிரபு! அர: வசந்தீ..வேண்டாம்... வ.சே : விட்டு விடுங்கள் பிரபு! அர: வசந்தி வேண்டாம். வா இங்கே ..