4 மகனைத் தடுத்து தன்னைக்காப்பாற்றிய தன் மனைவியின் பண்ணப் பற்றி அரசன் சிந்தித்து மனம் மாறுகிறான்.மனோ கரனும் சத்யசீலரும் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு உயிர்விடப் போகும்சமயம் அரசர், ஒற்றன் உருவத்தில் சென்று முத்திரை மோதிரத்தைக் காட்டி அரச கட்டளையை திரும்பப் பெற்று விட்டதாக அறிவித்து அவர்களை காப்பாற்றி மறைகிறார். மனோகரனும், சத்யசீலரும், தோழன் ராஜப்ரியனும், மாறு வேடத்தில் நகருக்குள் வராமல் இருக்கிறார்கள். மனேகரனுக்கு நகர் திரும்ப பிரியமில்லை - அரசர் பத்மாவதியிடம் போய் கடிதத் தால் ஏற்பட்ட தவறுதலான எண்ணங்களுக்கு சரியானவிளக்கம் பெற்று இருவரும் ஆனந்தமடைகிறார்கள். கடிதத்தை மாற்றி பத்மாவுக்கு களங்கம் கற்பிக்க தான் செய்த சூழ்ச்சி அரசனுக்கு தெரிந்துவிட்டதால் அரசனையே கொன்றுவிட வசந்தசேனை எண்ணுகிறாள். அவளால் கொல்லப்பட்டு அடிக்கடி வந்து பயமுறுத்தும் அவளது இறந்துபோன புருஷன் கேசரிவர்மனின் ஆவி அப் போதும் வந்து பயமுறுத்துகிறது. அன்றிரவு வசந்தசேனையின் மகன் பைத்யக்கார வசந்தன் அரச உடை போட்டுக்கொண்டு அந்தப் பக்கம் வருகிறான். அரசன் என நினைத்து தன் மகனை கொன்று விடுகிறாள்,வசந்தசேனை மகன் போய்விட்ட கவலையில் தானும் தற்கொலை செய்து கொள்கிறாள், பரண்டிய நாட்டுக்கும் அரசன் புருஷோத்தமருக்கும் போர் மூள்கிறது புருஷோத்த மருக்கு தோல்வி ஏற்படும் நிலையில் மாறுவேடத்திலிருக்கும் மனோகரன் போரில் தலையிட்டு சோழநாட்டுக்கு வெற்றி உண் டாக்குகிறான் பிறகு புருஷோத்தம ராஜர் மனோகரனை உணர்ந்து எல்லோரும் இன்பமாக வாழ்கிறார்கள்.
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/5
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை