பக்கம்:மனோன்மணீயம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறம் ஒரு சார் -- காலம் : எற்பாடு (நேரிசை ஆசிரியப்பா) 鷺 o i (தனிமொழி) காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய் இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம்2 5. பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி: அதனால் அன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை 10. இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்குக் வேண்டும் உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள்தான் இலக்கற் றிருப்பது? இதோ ஒ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி 15. அதன் சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனது பூம் பாரகம் பரப்பித்து சிலாச் சிறுகா யாக்கி இதோ! என் . 20. தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே “இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின் புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் செனமின்!? எனத் தன் சிறுவரைப் 25. புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் 1. நெருங்கிய பாம்பு _2 அழகிதாம் 3. தொழில் 4. குறிக் கோள் (sim) 4. நோக்கமொடு 6. பயனுற 7. பூந்தாது 8. உள் விடில்லாத 9. துணி 10. துறட்டி 11. குதிரை, ஆடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/103&oldid=856073" இலிருந்து மீள்விக்கப்பட்டது