பக்கம்:மனோன்மணீயம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : இரண்டாம் களம் 105 பாணர் : மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க்கூட்டம் வஞ்சியன் சினந்தாலென். நெஞ்சிலுங் நினையார்காண். (3) படை : ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே (நேரிசை ஆசிரியப்பா தொடர்ச்சி) கடை : பார்ப்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும், வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும். 110. பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் சூடிய வஞ்சித் தொடையும் தண்ணுமை’ பொருவு தம் புயத்தில் வெண் கலப் பொருப்பில் உருமுகவிழ்ந் தென்னத் தட்டிய ஒதையும் இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில் - 115. மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை காட்டிய முகக்குறி யாவும் நன்றல வேட்டலோ இதுவும் விளையுமா றெவனோ! நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்தச் - கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத 120. மைம்முகில் ஈட்டமும் வான் தொடு விலோதனப் இபருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச் செல்லும் அசலத் திரளும் செறிந்து * நெல்லையை வெல்லவ்ே செல்வது திண்ணம் அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை 125. வந்தவா றிதுவே! வந்தவா றிதுவோ! o (இரண்டுழவர்கள் வர) மூதலுழவன் : - வியப்பென்? சுவாமி? too. 3 வயப்படை வந்தது . அறிவையோ நீயும்? முதல் உழ : * o அறிவேன் போருக்கு அழைத்திடில் யாவர் அணுகார்? 1. வெற்றி தரும் டை 2. மத்தளம் 8. ஒத்த 4. இடி 3. காற் குளம்பு 6. கொடி 7. மாலை ப்ோன்ற தேர்க் க்ட்டம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/107&oldid=856081" இலிருந்து மீள்விக்கப்பட்டது