பக்கம்:மனோன்மணீயம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை Q.' மேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும் அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது முன்னோராற் பொருட்சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவை யொழிய இனியும் இறவாது மறைந்து கிடப்பனவற்றை வெளிக்கொணர்ந்து நிலைபெறச் செய்தலேயாம். இவ்வழி யில் பெரிதும் உழைத்துப் பெரும்புகழ் படைத்த திருவாளர் தாமோதரம் பிள்ளையவர்கள், திரு. வே. சாமிநாதய்யர் அவர்கள் முதலிய வித்துவ சிரோன்மணிகளுடைய நன்முயற் சிக்கு ஈடு கூறத்தக்கது யாது? தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்வீகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க அம் மக்கள், அவை இருக்கு மிட்ந்தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமை போலன்றோ ஆகும், ஈடுமெடுப்பு மற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமுமுடைய முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல் களை நாம் ஆராய்ந்து அறிந்துஅநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல்! ஆதலால் முற்கூறிய உத்தம வித்துவான் களைப் பின்றொடர்ந்து நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங் களைச் சோதனை செய்து தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப் பொருளை கூேடிமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற் கடமையாகும். பூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனைப் பாதுகாப்பதோடு ஒவ்வொருவரும் தத் தமக் யென்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும் புதுவரும்படி யைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்பது பொதுவாக உலக நோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு: இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவர்க்கும் விட்டு விலகத் தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு: அந்த அந்தத் தலைமுறையார். களுக்கு அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவு: சிறப்பேயொழிய வேறில்லை. அத் தலைமுறையாளரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/11&oldid=856087" இலிருந்து மீள்விக்கப்பட்டது