பக்கம்:மனோன்மணீயம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iairങ്ങfി : மனோன் : வாணி : 50. 55. 60. 65. 70. 75. மூன்றாம் அங்கம் : மூன்றாம் களம் 119 நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென ஒதினன் ஒர்கால் ஒகோ! ஒகோ! (மெளனம்) கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழற்ாய். அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக்க கடிபுரி கடந்துபோய் நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணிர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவதுபோல் விழுமிய பரல்மேல் ஒழுகும் தீம்புனல் ஒதையும் கேட்டுப் பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி இருவரும் மெளனமாய் நெடும்பொழு திருந்தோம் கரையிடை அலர்ந்த காவி யொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர். வருவதிங் கறியா மதியிலி அதனைக் கண்ணினை ஒற்றிலன், உள்மனம் உகந்திலன்; மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன். ஆர்வமும் அன்பும் அறியார் மான3 ஒடும் தீம் புனல் மாடே விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன் முறுவலோ டலரும் ஏதோ மொழிய உன்னும் முன்னரென் அன்னையங் கடைந்தாள் திமொழி பலவும் செப்பினள். யானோ? நாவெழல் இன்றி நின்றேன். நண்பர் மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர், அதுமுதல் அதுகாறும் அவர்தமை ஐயோ! கண்டிலேன் இனிமேற் காண்பனோ? அறியேன். 1. எதிர்பாராமல் 2. குவளை 3. போல (உவம உருபு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/121&oldid=856112" இலிருந்து மீள்விக்கப்பட்டது