பக்கம்:மனோன்மணீயம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 165. 170. 175. 180. 185. 190. 195. மனோன்மணியம் பூரிய உயிரஃ தாயினும், தனது சிரிய வலையிற் சிக்குண் டிறந்த ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள் ஆயிரம் அருந்த அருகிருந் தாட்டி மிக்கநல் அன் பெனும் விரிந்தநூல் தெளிய அக்கரம்' பயில்வ ததிசயம்! அதிசயம்! இப்படி முதற்படி, இதுமுத லாநம் ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும் கற்பதிங் கிந் நூற் கருத்தே. அதனால் இத்தனி உலகில் எத்துயர் காணினும் அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச் சுற்றநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க வைத்த அக் கினியென மதித்தலே உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர்: ஒருகால் காரண காரியம் காண்குவம் அல்லேம். யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின் அலர்தலே அன்ன வை விளர்நிறம் கிளர நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ?_உரைத்த பின் மற்றதன் உசிதம் யார் உணரார்? நிசி யலர் மலர்க்கு வெண்மையும் நன்மனம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இஷ்ட நா யகராம் சயின மறிந்துவந் தெய்திடும்? அங்ங்ணம் மேவிடில் அன்றோ காய் தரும் கருவாம்? இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள் நிறை அன்பே ஆக்கும். சிற் றறி வாதலான் முற்றுநாம் உணரோம். அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங் கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம் உளதென நம்பலே யூகம் அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற் 1. எழுதப் படிப்பது 2. நினைப்பர் 3. மேன்மை 4. இரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/130&oldid=856133" இலிருந்து மீள்விக்கப்பட்டது