பக்கம்:மனோன்மணீயம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A2 மனோன் மணியம் கதைச் சுருக்கம் முற்காலத்தில் மதுரைமாநகரில் ஜீவகன் என ஒரு பாண்டியன் அரசு புரிந்து வந்தான். அவன் பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன். ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவனாயினும் முற்றும் தன்னய மொன்றே கருதும் தன்மையனா யிருந் தான். அதனால் அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன் போல நடித்து அவனை எளிதிலே தன்வசப்படுத்திக் கொன டான். அங்ங்னம் சுவாதீனப்படுத்திய பின்பு தன் மனம் போனபடி யெல்லாம் அரசனை யாட்டித் தன் செல்வமும் சொல்வாக்கும் வளர்த்துக் கொள்ளத் தொன் னகராகிய மதுரை இடங்கொ.ாதென உட்கொண்டு அந்நகரின் மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலியன இயற்று . வித்து, அல் விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும் படி செய்தான். முது நகராகிய மதுரை துறந்து கெடுமதி யாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் ஜீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று அவ னுடைய குலகுருவாகிய சுந்தர முனிவர் அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திரு நெல்வேலிக் கருகிலுள்ள ஒர்ஆச்சிரமம் வந்தமர்ந்தருளினர். முனிவர் வந்து சேர்ந்த பின் நிகழ்ந்த கதையே இந்நாடகத் துட் கூறப்படுவது. முனிவர் எழுந்தருளியிருப்பதை யுணர்ந்து ஜீவ கன் அவரைத் தன் சடைக் கழைப்பித்து, தனது அரண்மனைக் கோட்டை முதலியனவற்றைக் காட்டி அவை சாசுவதம் என மதித்து வியந்து கொள்ள, அவ்விறுமாப்பைக் கண்ணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப் பாகக் கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் கேr மகரமாகச் சில கிரிரா விசேஷம் செய்யும் பொருட்டு அவன் அரண்மனையில்: _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/14&oldid=856150" இலிருந்து மீள்விக்கப்பட்டது