பக்கம்:மனோன்மணீயம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : மூன்றாம் களம் 161 மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்து பின் நின்று வாழ்ந்ததும் அன்று! மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றுநீ ருடன் நம் ஆண்மையும் அளித்து 270. நானா துலகம் ஆளல்போல் நடித்தல் நானாற் பாவை உயிர் மருட் டுதலே! ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி! அதனாற் குடி லா! அறிகுதி துணிபாய். 275. எதுவா யினும்வரின் வருக ஒருவனை வணங்கியான் இணங்குவான் என நீ மதியேல் (எழுந்து) வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம் கருதுவ பலவுள காணுதும். 280. இருந் அதுகா றிவ்வயன இனிதே. (ஜீவகன் போக) குடில : கருதுதற் கென்னே! வருவது கேடே தப்பினாய் இருமுறை தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே (பலதேவனை நோக்கி) அதற்கெலாம் காரணம் பலதே o அறிகுவை, ஒருவன் 285. இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில், குடில உன் நடக் கையினால், பலதே : - உன் நடக் கையினால்! மன்னனைக் குத்திட உன்னினை ஊழ் வினை! என்னையே குத்திட இசைந்தது; யார் பிழை? குடில : பாழ்வாய் திறக்கலை, ஊழ்வினை! ஊழ் வினை! 290. பகைக்கலை என நான் பலகாற் பகர்ந்துளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/163&oldid=856202" இலிருந்து மீள்விக்கப்பட்டது