பக்கம்:மனோன்மணீயம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மனோன்மணியம் மெய்த்தகை வீரரே!’ உத்தம நண்பரே ! 205. எண்ணுமின் சிறிதே! என்னைநம் நிலைமை! களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ? வெளிக்களத் துளபகை விண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்; கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர். 210. பெரிதுநம் அபாயம்! பேணி அதற்குநீர் உரியதோர் கெளரவம் உடையராய் நடமின். விடுமின் வெகுளியும் வீண் விளை யாட்டும் படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல் அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம். 215. உடைபடின் உலகெலாம் கெடுமொரு கனத்தில் . கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பார் அதனால் அன்பரே! ஆனைக் கடங்குமின். குடில : (மூச்சுவிட்டு) ليت, } நாரா : இதுபோல் இல்லை யெனக்குப காரம் 220. இரந்தேன், அடங்குமின்! இரங்குமின் எமக்கா: முதற்சேவ : நாரா யனரே! நவின்றவை மெய்யே! ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி! காரா : ஏதுநீர் அநீதியென் றெண்ணினிர்? நண்பரே! ஒதிய அரசன் ஆணையை மீறி 225. எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா மனு முறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான் உண்டகோற் றுரிமையும் ஒருங்கே மறந்து மற். றண்டிய அரச குலத்திற் கபாயம் 230. உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக் குற்றமில் பாண்டிக் கற்ற மில் கேடு பண்ணினேன் என்னப் பல தலை முறையோர் எண்ணிடும் பெரும்பழிக் கென் பெயர் அதனை 1. முடிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/176&oldid=856229" இலிருந்து மீள்விக்கப்பட்டது