பக்கம்:மனோன்மணீயம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : ஐந்தாம் களம் 18: தீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின் 90. வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர் சேய்மை உரிைமனை திரும்பார் ஒப்பர். ஆதலால் ஜீவக! தீதென வருதற் கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல் 95. என வின் றெய்திய வற்றால் உனது மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின், ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த மருங்கே அணைந்து வாழலே கருமம். வே றிலை தேறு மார்க்கம் -- 100. கூறுதி அதனால் உன் மனக் கோளே. . (2) ஜீவ ! ஐய! யான் உரைப்பதென்? அடுத்தவை இவையெலாம் கைவிடில் என்னுயிர் கழியும், அதனில் இன்றியான் பட்டஇகழ்ச்சி முழுதும் பொன்றிடப் பொருது பின் பொன்றுதல் அன்றே 105. சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் -- மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே! சுக்தர : சங்கரா! சற்றோ தாதான் மியபலம்!” வெங்கரா’ பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய 110. அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி: இவ்வுயிர் இயலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்த பின் ஐயம் 115. வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை உள்ளது: தமிழர் ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்; நீ காவா யாகிற் காப்பதெம் கடனே. 1. ஒற்றுமைப் படல் 2. கொடிய முதலை 3. மகவு 4. மயக்கம் s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/183&oldid=856244" இலிருந்து மீள்விக்கப்பட்டது