பக்கம்:மனோன்மணீயம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265. 270. 275. ஜீவ : 280. குடில 285. 290. 295. நான்காம் அங்கம் : ஐந்தாம் களம் 187 அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும், அடிகள் அறைந்தவா மனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆகுமோ? வைப்பிடம் எங்கு பின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா’ உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! முருகனும் நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன் அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர் பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிரி. காண்டும்! காண்டும்! கடுஞ் சிறை சேர்த்தனை. சேரா திவரை மற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே. வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே. அல்லொடு பகல்போல் அல்லல் செய் கவலையும் விரமும் எங்ங்னம் சேருமோ அறியேன். கவலை தீர் உபாயம் கருதில் நுவல் தரு கல்லறை நன்றே கடிமண முடியின்... கடிமண மதற்கோ முடிபுனை மன்னர் வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை: வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே. ஒருநலம் காணின் ஒருநலம் காணேம். ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல் மாற்றல லாய்விடின் மனோன்மணி யென்படும்? பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்! புருவ புண் ணியம் அன்றோ மன்றல் --ജ 1. வஞ்சனையால் 2. விடநாக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/189&oldid=856255" இலிருந்து மீள்விக்கப்பட்டது