பக்கம்:மனோன்மணீயம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I94 மனோன்மணியம் பொறிகளறி யாதுள்ளே புகும்பொருள்கள் இலையென்பர் பொருளே உன்னை அறியவவா வியகரணம் அலமாக்க' அகத்திருந்தாய் அச்சோ அச்சோ. (3) (புருடோத்தமன் சற்றே அகல). (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) குடில: (தனிமொழி) 40. மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்! தேவரும் உளரோ? யாதோ? அறியேன். இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம் மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு உருவிலை என்பர். ஒசையும் உருவும்! 45. பாடிய பாட்டின் பயனென்! அஃதோ! நாடி அறிகுதும், நன்று நன்று. (புருடோத்தமன் திரும் பி வரF (குறள் வெண் செந்துறை தொடர்ச்சி) (பாட) * --- புலனாரக் காண்பதுவே பொருளென்னும் பேதமிலாப் புன் மை யோர்க்கிங் குலவாதென் உள நிறையும் உனதுண்மை - உணர்த்தும் வகை உண்டே உண்டே (4) பெத்தமனம் கற்பிதமே பிறங்குநினை வெனப் பிதற்றும் பேதை யோர்க்கோர் யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமுனது நிலையுரைப்ப தென்னே யெனனே. (5). தேர்விடத்தென் உள்ள நிறை தெள்ளமுதே உன் னிலைமை தேரா திங்ங்ன் ஊர் விடுத்தும் போர் தொடுத்தும் உனையகல நினைத்ததுமென் ஊழே ஊழே. . (6) 2. அலைய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/196&oldid=856273" இலிருந்து மீள்விக்கப்பட்டது