பக்கம்:மனோன்மணீயம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : இரண்டாம் களம் ஐயோ! போதா தென்றோ அன்னோர் 130. போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்: தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா. ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் 135. கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் | முந்துகின் றவரே முதற்றவ முனிவர். வாணி : அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ? :மனோன் : ஒத்ததே யார்க்கும் மேம்படக் கருதிடில் ஒம்புதி நீயும். 140. அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்த நற்றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சி நின் நன் மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரனன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி 145. எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என் கடன் இதுவரை, இனி யுன் இச்சை. வாணி ஆயிடிற் கேட்கு தி அம்மணி! என்சூள்! கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி 150. வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ங்னம் வேதகம் செய்த போதக யூதபம்4 பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக, அவனை நீ ஆனையுநாள் அடியேன் மணநாள், அன்றேல் 135. இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் s பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்குக் கடமையே பிறவும் கற்றறி யேன் விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! 1. வுெ 2. விளாங்கனி 3. வேறுபடுத்தி 4, அரச யானை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/207&oldid=856298" இலிருந்து மீள்விக்கப்பட்டது