பக்கம்:மனோன்மணீயம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புக் கட்டுரைகள் ! 1. மனோன்மணிய நாடக மாண்பு பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தம்முடைய முப்பத்தாறாவது வயதில் இயற்றிய ஒப்பற்ற பெருநூல் மனோன்மணியமாகும். நாடகத் தமிழில் நல்ல நூல்கள் மலரவில்லை என்ற குறையை இல்லையென்றாக்கிய இனி தான நூல் மனோன்மணியமாகும். முதலாவதாக இந் நாடகத்தின் வழி, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தமிழினம் உயர்வுபெற வேண்டும் என்பதற்குரிய வழிமுறைகளைச் செவ்விதின் கிளத்தியுள்ளார். மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றினையும் வீரவுணர்வினையும் ஆங்காங்கே வற்புறுத்துகின்றார். இரண்டாவதாகத் தமிழ் மறையாகத் துலங்கும், திருக்குறட் கருத்துக்களையும், தொடர்களையும் ஆங்காங்கே தம் நூலிடையே அழகுபட அமைத்துள்ளார். மூன்றாவதாகத் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும் பழமொழிகளை ஏற்றஇடங்களில் பொருட் பொருத்த முறக் கையாண்டுள்ளார். நான்காவதாகச் சங்க நூல் தொட்டு இடைக்கால இலக்கியங்கள் வரை இலங்கும் செந்தமிழ் நூல்களைத் தெளிவுறக் கற்றவர் என் பதனை நாடகத்தின் இடையே காட்டிச் செல்கின்றார். ஐந்தாவதாக இயற்கையில் மனிதன் ஈடுபாடு கொண்டு, இயற்கையில் தோய்ந்து இணையிலாத இன்பமும் அமைதி யும் பெற வேண்டுமென்பதை நூலில் வற்புறுத்திக் கூறி யுள்ளார். ஆறாவதாக நல்வாழ்விற் கியைந்த தத்துவக் கருத்துக்களைப் பாங்குறப் புலப்படுத்தியுள்ளார். அனைத்தி னும் மேலாகக் காப்பிய இலக்கணம் முழுதும் நிரம்பிய நூலாக மனோன்மணியத்தைப் படைத்துள்ள திறம் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/221&oldid=856330" இலிருந்து மீள்விக்கப்பட்டது