பக்கம்:மனோன்மணீயம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மனோன்மணியம் மேலும் பாஷாபிமானமும் தேசாபிமானமும் கொள்ள வேண்டும் என்பதனை ஜீவகன் படைஞர்க்கு எடுத்து மொழி கின்றான். இதுபோன்று இன்னும் பலவிடங்களில் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர் மொழிப்பற் று.ாட்டு கின்றார். நாட்டுப் பற்று மொழிப் பற்றினை ஒரளவு ஜீவகன் உரையில் வைத்த நாடக ஆசிரியர், நாட்டுப்பற்றினை அவன் கூற்றாகவே பெருமளவில் வெளிப்படுத்தியுள்ளார். வஞ்சி சூடிவந்த வஞ்சி நாட்டாரின் வஞ்சனையை அடியோடு மாய்க்க ஜீவகன் சேனை திரள்கிறது. இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்" என்று இறுமாப்புக் கொள்கிறான் ஜீவக மன்னன் . தன் படை வீரர்களுக்கு நாட்டுப்பற்றினை நலமுற ஊட்டுகின்றான். நாட்டபிமானமில் நடைப் பின மாகக் கருதுகின்றான். தேசாபிமானத்தினைப் பொரு ளாகக் கருதவேண்டும் என்கிறான். அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயினும் உயர்ந்து நாட்டுப் பற்றுக் கொழுந்து விட்டெரியும் உள்ளமே என்கிறான். அவ்வுளமே வானோர். உவந்து வரவேற்கும் உள்ளம் எனவும் கூறுகின்றான். அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் காட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு! -அங்கம் 4: களம் 1, 136.138 தாமிரபரணி யாற்றைக் கூறித் தன் படைஞர்க்கு நாட்டன் பினைத் துரண்டுகின்றான் ஜீவகன். தாமிரபரணி யின் நீரினை உண்ணாதவர் ஒருவரும் இருக்க முடியாது; நீரை உண்டவர் நாட்டுப் பற்று உடையவராகத்தான் இருக்க முடியும் என்று மேலும் கூறுகிறான் ஜீவகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/224&oldid=856336" இலிருந்து மீள்விக்கப்பட்டது