பக்கம்:மனோன்மணீயம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண் பு 223 கருதுவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை மக்காள்! அருங்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரகது முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி. இதுபரி ணமித்து உம் இதயத் துறைக! அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடும் அளவும் என்றன்றோ வாழ்த் தி நுங்தமை வளர்த்தினள். = . -அங்கம் 4: களம் 1, 95.130 இவ்வாறு ஜீவகன் வழியாகப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாட்டுப் பற்றினைப் புலப்படுத்தி யுள்ளார். விரவுணர்வு 'வேற்படைத் தலைவரே! தாற்படையாளரே! கேட்பீர் ஒரு சொல்" என்று தன் வீரப் பேச்சினைத் தொடங்கு கின்றான் ஜீவகன். படை வீரர் கொண்ட கிளர் போர்க் கோலத்தினை நோக்கி மகிழ்கிறான். அணி வகுத்து நின்ற அவ்வீரர் திருக்கோலமே பிறவி எடுத்ததன் பெரும்பயன் என்கிறான்; அப்பேறு பிறர் க்கு வாய்க்காது என்கிறான், பாக்கையின் அரும்ப யன் அவர்கட்கு வாய்த்ததாகக் குறிப் பிடுகின்றான். இவ்வாறு கூறித் தாயினும் தயை பூண்ட தாய் நாட்டிற்குத் தீமை விளை விக்கத் துணிந்த பகைவரைக் கண்டு கொதித்தெழ வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றான். பகைவர் படையெடுப் பினை எண்ணுந்தோறும் சினத்தி மேலெழுந்து, கண்கள் பொரிந்து, நெடுந் திரட் புருவம் கொடுந் தொழில் குறித்து, வளங்கெழு மீசை கிளர்ந்தெழுந் தாடுகின்றதாம். இதனைக் கண்டு பாண்டிய மாதா புன்னகை பூக்கின்றனளாம். அமுதம் ஈந்துவந்த தாம் பிர பரணித் தாய் அலையெறிந்து ஆரவாரிக்கின்றனளாம். இவ்வாறு பாண்டிய மன்னன் தன் படைஞர்க்கு வீரவுணர்வு வட்டுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/225&oldid=856337" இலிருந்து மீள்விக்கப்பட்டது