பக்கம்:மனோன்மணீயம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணிய நாடக மாண் பு 22? அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். - திருக்குறள் : 483 என்னும் குறளைத் தழுவியதாகும். இரண்டாவதாக, இரண்டாம் அங்கம் முதற்களத்தில் rவக வழுதியோடு குடிலன் உரையாடும்பொழுது திருக் குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறான். சுந்தர முனிவரின் யோசனைப்படி, ஜீவகன் மனோன்மணியின் திருமணம் குறித்துச் சேரநாட்டு மன்னன் புருடோத்தமனிடத்தில் தாது அனுப்பவேண்டுமெனக் கூறுகிறான். இச்செய்தி குறித்துக் குடிலன் குறிப்பிடும் கருத்து யாது என வினவிய ஜீவகனுக்கு, புருடோத்தமனிடம் தூதுவனை அனுப்பித் தற்போது அவன் ஆட்சியின் கீழிருக்கும் நன்செய்நாட்டினை நம்முடையது என்று கோரினால், ஒருவேளை அவன் உடன் பட்டுத் திரும்பக் கொடுத்தாலும் கொடுக்கலாம்; இன்றேல் ஏதேனும் வாதம் தொடங்கினாலும் தொடங்கலாம். அது பொழுது சமாதான முறையில் இந்த மணவினைபற்றிப் பேசி ஒர் உடன்பாடு காணலாம் என்று குடிலன் மறுமொழி பு:கன்றான். இதனைக் கேட்ட அளவில் மெத்தவும் களித்தோம் _த்தமோ பாயம்" என்று ஜீவகன் மகிழ்வதோடு, திருமணமும் உறுதியானதாக மனத்துள் மதிப்பதாகக் கூறு ன்ெறான். அப்பொழுது குடிலன் இடைமறித்து, உபாயம் நன்றாக இருப்பினும், துரது செல்லும் துரதுவர் திறமுடைய வராக இருக்கவேண்டும் என்று குறிப்பிடுகின்றான். இதனை அவன, வினைதெரிங் துரைத்தல் பெரிதல, அஃது தனைகன் காற்றலே யாற்றல் என்று குறிப்பிடுகின்றான். இக் கூற்று, திருக்குறளி ல், வினைத் திட்பம்" என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/229&oldid=856345" இலிருந்து மீள்விக்கப்பட்டது