பக்கம்:மனோன்மணீயம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகாமி சரிதம் 253 கண்ணால் எங்ங்ணம் கானுவன்? கண்ணுளார் எண்ணவும் படாஅர்"என்னுளும் உளார்’ என்றும் துணைபுணரி அன்னத் தாவி பரப்பிய அமளி மிசை படுத்தும் கண்படா நிலையில் நெஞ்சம் நிறை தளர்ந்து, நாணமும் நன்னலமும் தொலைய நடுங்குகின்றாள். இதற்கு மாறான காதல் அனுபவம் வாணியினுடையது. அது மனோன்மணியின் காதல்போல் திடீரென்று தோன்றிய கன்று மெல்ல மெல்ல வளர்ந்து நெஞ்சில் நிறைந்தது. மங்கையர் தன்மனத்தினை வாங்கும் அழகனாம் நடராச னையே தன் மனத்தில் கொண்டு பிற ஆடவரைக் கனவிலும் கருதாத நிலையில் கற்பொழுக்கத்தோடு வாழ்ந்து வரு கிறாள் வாணி. அவளைப் பொறுத்தவரையில் காதல் என்பது விளையாட்டோ, பொழுது போக்கோ, வணிகமோ அல்ல: காதல் அவள் உள்ளத்தில் எல்லாமாய் எங்குமாய் நீக்கமற நிறைந்தொளிர்கின்றது. ஆனாலும் அவளுக்குத் தான் எத்தனை தொல்லைகள்? சோதனைகள்? அவள் காதலனை அவள் தாய் மனை வாரா வண்ணம் தடுக்க, குடிலன் ஊர் வாரா வண்ணம் தடுத்துத் துரத்துகிறான். தாட்டின் மன்னன் ஜீவகனும் வாணியின் மனத்தை அச்சுறுத்தி மாற்றமுனைகிறான். அவள் காதலன் நடராச லும் ஒரு சொல் வேண்ட, அதனை நானந் தடுக்க வாணி தராத நிலையில், அவனும் கலக்கமுற்றுச் செல்கிறான். இதனையும் எண்ணித் துடிக்கிறாள் வாணி. இவ்வாறு நெஞ்சும் நிறையும் நாணுமழிந்து, அழுத கண்கள் அஞ்சனம் கரைந்து, கஞ்சனக் கதுப்பும் கரைந்து, கலுழ்ந்து நிற்கிறான் காதலின் செவ்வை யுணர்ந்த வாணி, மனோன்மணி, வாணி இருவர்தம் உளநிலையும் காதலை எண்ணிக் கலங்குவதாக உள்ளது. இந்நீர்மை வாய்ந்த இருவரின் உள்ளம் எதனை அவாவும்? அவர்கள் ஒன்றனைச் சொல்லவோ, கேட்கவோ விழைவது எப்பொரு ளைப் பற்றி” என்று நினைப்போம்? வேறு யாது? காதல் தொடர்பான சொற்களையும் காதலால் விழுங்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/255&oldid=856403" இலிருந்து மீள்விக்கப்பட்டது