பக்கம்:மனோன்மணீயம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகாமி சரிதம் 259. வணக்க விரும்பி வந்தவர்கள், பொருள் விரும்பி, குலம் விரும்பி, பொலம் விரும் பி, என்னை மனக்க வந்தார்களே தவிர என்னை விரும்பி என்னை மனக்கவந்தவர்கள் யாரும் 1ல்லை. என்னை விரும்பியவர் அவர் ஒருவரே என்ற உண் மயை அப்பொழுது தெளிந்தேன்; ஆயினும் அவர் இல் லையே! ஒரு வாரம், ஒரு மாதம், ஒருவருட காலம் ஓயாமல் அவரையே நினைத்திருந்தும் அவர் திரும்பி வரவில்லை. *ruir தோழிய்ரோ, முன்னர் வெறுத்து மொழிந்தவரை 1)ப்பொழுது தேடினால் எங்கிருந்து கிடைப்பார்' என்று ாண் செயலைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்தனர். அவரைக் அண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக் கண்டிடச் சென்று யான் பட்ட துன் பத்திற்கு அளவேயில்லை. அவர் பருப்பார் என ஊக நெறியில் கூறியவர்களைத் தவிர உள்ள படியே கண்டவர்கள் யாரும் இல்லை. உண்டெனிலோ அண்டிடுவேன்; இல்லையெனில் விரைவில் உயிர் விடுதலே நலம்" என்று கருதி, ஒருவித முடிவோடு இவ் ஆண் வேடந் தாங்கி, எங்கெங்கும் தேடி உடல் இளைத்தேன். தீர்த்த குளம், மூர்த்தி தலம், குருக்கள் உறையும் மடம், சமய வாதக்கணக்கர்கள் வாதிடும் சமய மண்டபம், பயாகியர் வாழும் குகை முதலிய பல விடங்களுக்குச் சென்று தேடினேன். என் முயற்சிகள் எல்லாம் பாழே . தங்கள் தங்கள் பேட்டினை மறக்காத மானினையும், களிற்றினை யும், குயிலினையும் நான் மறவாத நாதனை எங்கும் அறிவீரோ? அறிந்தால் கூறுங்கள் என்று வினவவும் பயன் இல்லை. இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் தேடியும், ான் அதிபரைக் காணமுடியவில்லை. இனி இவ்வுடம்பும் எனக்கு மிகவும் அருவருப்புடையதாகும். அவர் இல்லை யெனில், என்னளவில் இந்த உலகமனைத்தும் எந்ந லமும் இல்லாத ஒரு சுடுகாடேயாம்! மன்னு தவ மாமுனிவனே! ான்னுடைய உயிர்த்துணைவரின் சிறு சாயை உங்களிடம் இருப்பதைக் கண்டு என் மனத்துயரத்தினை நின்பால் சொல்லிச் சிறிது ஆற்றிக் கொண்டேன்; இது தவிர:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/261&oldid=856417" இலிருந்து மீள்விக்கப்பட்டது