பக்கம்:மனோன்மணீயம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பு கலன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் oué 1. மனோன்மணி அவள் அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர் வற்றவள். அவளுக்கு அப்போது வயது பதினாறாக இருந்தும் அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர்.நெஞ்சமும் போல யாதொரு பற்றும் களங்கமுமற்ற நின் மலமாகவே யிருந்தது. -பேராசிரியர் கந்தரம்பிள்ளை மனோன்மணிய நாடகக் காப்பியத்தின் தலைவி மனோன்மணி தொல்குலமாம் பாண்டிய குலத்தில் தோன்றிய ஜீவக மன்னனின் மகள் ஆவள். இவள் அன்பும் அறமுமே யாக்கையாகக் கொண்டவள். தந்தையிடத்தும் தவமுளிைவராம் சுந்தரரிடத்தும் துாய அன்பு கொண்டவள்: பிறர் இடுக்கண் உறின் அதனைத் துடைத்தெறிய வேண்டும் என்னும் தொண்டுள்ளமும் பிறர் வாழத் தன்னலத்தையும் அறக்கலாம் என்ற தியாக மனப்பான்மையையும் கொண் ப_வள்; காவியத் தலைவிக்குரிய நற்பண்புகள் அனைத்தும் நன்கு வாய்க்கப் பெற்றவள்: சங்ககாலத் தலைவியின் நற்குண நற்செய்கைகளைக் குறைவறக் கொண்டவள். பேரழகும் பெருங்குணமும் கொண்டு பல்வேறு இயற்கை யினை உடைய மாந்தர் தம் நெஞ்சங்களிலெல்லாம் ஒளி விளக்காக இவள் திகழ்கின்றாள். முதல் அங்கத்தின் முதற் காட்சியிலேயே இவள் நேரடியாகத் தோன்றாவிடினும், இவளைப் பற்றிய குண அழகு மேம்பாடுகளைப் பிறர் வாயி லாகக் கேட்டறிந்து நாம் இவளை நேரடியாகக் காணாம லேயே இவள் பேரில் அன்பு செலுத்தத் தொடங்கி விடுகின் றோம். ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியர் வெனிஸ் வணிகன்" (the Merchant of Venice ) areiwg)/lb prr as&£«v, wi நாடகத் தலைவியின் குண அழகு மேம்பாடுகளை நேரடி யாகக் கிளத்திக் கூறாமல், பெலானியோ என்னும் அவன் தன் காதலன் கூற்றாக நமக்குப் புலப்படுத்துகின்றார். இதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/263&oldid=856421" இலிருந்து மீள்விக்கப்பட்டது