பக்கம்:மனோன்மணீயம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மனோன்மணியம் விரகினைக் (Technic) கையாண்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும் காவியத் தலைவியைத் தோற்றுவாய் செய்யும் பொழுதே நம் நெஞ்சில் நீங்காது நின்று ஒளிவிடும் அன்பின் கொடி விளக்காக ஆக்கிக் காட்டுகின்றார். சான்றாக, துறவு நெறியும் தொண்டுள்ளமும் கொண்ட துரயோரான சுந்தர முனிவர் தன்னை வணங்கிய ஜீவக மன்னனைப் பொதுப்பட வாழ்த்திவிட்டுச் சுகமே போலும், மனோன்மணி?’ என்று மனோன்மணியின் நலனைத்தான் முதலாவதாக உசாவுகின்றார். அடுத்து, ஜீவகன், இன்னும் வேண்டியது யாதோ? எமக்கருள் குரவ1’ என்று கேட்ட பொழுது, உன்னையும் உன் குலத்துதித்த நம் மனோன் மணி தன்னையும் சங்கரன் காக்க" என்று அவர்கள் பொருட்டு இறையருளை வேண்டிவிட்டு, அன்பும் அறமுமே யாக்கையாகக் கொண்ட நின் புதல்வியை யான் காண நேசித்தேன்" என்கின்றார். இக் கூற்றிலிருந்து மனோன் மணிபால் சுந்தர முனிவர் கொண்டுள்ள பரிவும் பாசமும் மதிப்பும் நல்லெண்ணமும் நன்கு புலனாகின்றன. முனிவர் வருகை குறித்துப் பேசிக் கொள்ளும் நான்கு நகர வாசிகளின் கூற்றுக்களும் மேலே குறிப்பிடப்பட்ட எண்ணத்தினை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன. முனிவர் ஒதியது என்னை' என்று கேட்ட இரண்டாம் நகர வாசிக்குப் பதில் அளிக்கும் மூன்றாம் நகரவாசி, மனோன் மணி எனப் பெயர் வழங்கினர்' என்று சொல்ல, நான்காம் நகர வாசி வாழ்த்தினர் போலும், மற்றென்" என்று கூறுகின் றான். இதனைச் செவிமடுத்த இரண்டாம் நகரவாசி, ‘பாழ்த்த தந்தையாம் ஜீவகனைக் காட்டிலும் மனோன் மணியிடத்துப் பரிவு மிகவுடையவர் சுந்தர முனிவர்" என்று பகர்கின்றான். இதனைக் கேட்ட மூன்றாம் நகரவாசி அளிக்கும் மறுமொழியே மனோன்மணியின் அகவழகினை யும் புறவழகினையும் ஒருங்கே நம் கண் முன் ஆடியின் நிழல் போல் அங்கை நெல்லிக் கணியெனக் காட்டிவிடுகின்றது. அவள்மாட்டு அன்பு செலுத்தாதவர்கள் யாரும் இலர் என்றும், வையகத்தில் அவளுக்கீடாக மங்கையர் யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/264&oldid=856423" இலிருந்து மீள்விக்கப்பட்டது