பக்கம்:மனோன்மணீயம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 மனோன்மணியம் "விண்ணணங்கு அனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து பித்துறச் செய்த பேதை என்றும், இணையிலா நவ்வியும் நண்பும் நலனும் உடையவள்" என்றும் மனோன் மணியைக் கனவிற் கண்ட நிலையிலேயே கவினுறப் பாராட்டி மொழிகின்றான். முடிவில் மனோன்மணியை நேரிற் கண்டபோதும், இங்கோ நீயுளை என்னுயிர் அமிர்தே' என்று பாராட்டிக் கனவிற் கண்ட காரிகையை நனவிற் கண்டு மாலையிடுகின்றான். முதல் அங்கத்தின் இரண்டாம் களத்தில் மனோன்மணி யும் வாணியும் கழல் விளையாடுகின்ற காட்சியே அவர்கள் நாடகத்தில் முதற்கண் வெளிப்படும் நிலையாகும். பாடத் தொடங்கும் பொழுதே மனோன்மணி தூய்மைக் காதலை யும் தூய்மையற்ற காமக் களியாட்டமாக எண்ணி மயங்கும் மருட்சி நிலையினைப் புலப்படுத்துகின்றாள். காதற் கடவுளாம் காமன் சிவபெருமானை அணைந்து நீராகிவிட்ட கதையினைப் பாட்டில் இழைத்துக் காட்டுகின்றாள். துணையறும் மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன் அணைகிலன் அரன்முன் னென்றாடாய் கழல் அணைந்து நீறானா னென்றாடாய் கழல் என்று பாடுகின்றாள். ஆயின் அவள் தோழி வாணியோ காதலே நெஞ்சம் எனக் கொண்டவள். நடராசனிடம் காதல் கொண்டு அந்நினைவில் திளைப்பவள். காதலின் வன்மையினையும் முழுமையினையும் கண்ட அவள் எதிர்ப் பாட்டுப் பாடுகிறாள். காமன் எரிந்தாலும் அதற்குமுன் கடவுளும் காதல் வயப்பட்டுப் போனார் என்ற உண்மையை ஒளியாது எடுத்துரைக்கின்றாள். அவள் பாட்டு வருமாறு: றோயினா லென்னை கேர்மலர் பட்ட புண் ஆறாவடு வேயென் றாடாய் கழல் அழலாடுக் தேவர்க்கென் றாடாய் கழல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/268&oldid=856431" இலிருந்து மீள்விக்கப்பட்டது