பக்கம்:மனோன்மணீயம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணி 269 _வில்லை; இசை பாடவில்லை; யாழ் மீட்டவில்லை: பொழி _லாடவில்லை; ஆபரணம் அணியவில்லை; ஆணை பிறப்பிக்க வில்லை; கிளியை மறந்தாள்; அன்னத்தைத் துறந்தாள் - இவ்வாறு செவிலித்தாய் காதலிற் கட்டுண்ட மனோன்மணி பின் மெய்ப்பாட்டினைப் புலப்படுத்துகின்றாள். ‘நண்ப! என்னுயிர் நாத' என ஏங்கிப் புலம்பிய புலம்பலை அவள் கூறி, நேற்றிரவு குழல் சரிந்து, வளை கழன்று, மாலை கரிந்து, விழி பிறழ்ந்து, மொழி குழறி, கண்ணிர் மல்கி வாட்டமுற்றிருந்த நிலையைச் சொல்லி, கேற்றுத் தவஞ்செய ஆசை என்றவன் தனக்குக் காதல்கோய் காண ஒரேதுவு மில்லை என்று முத்தாய்ப்பு ைவ த் து, ஜீவகனை எம்.தாய் இருக்கும் நிலைமையினி நீ-வந்தே காண்குதி" என்கின்றாள். காதல் கொள்வதற்கு ஒர் ஏதும் இல்லையாம் என்று பழித் துக் கூறியவளையே காதல் ஓர் ஏதுவும் இன்றி ஏன்? காதலன் நனவுக் காட்சியுமின்றிக் கனவுக் காட்சியிலேயே பற்றிக் கொள்கின்றது. o மனோன்மணியின் மன மாறுதலை-பண்பட்ட நிலை கயினை அவள் பேச்சு நமக்கு மெய்ப்பிக்கின்றது. உரைப்பதுஎன் வாணி உளமும் உளமும் நேர்பட அறியா என்றோ கினைத்தாய் ஏன் அதில் ஐயம் எனக்கு அது துணியே பூதப் பொருட்கே புலன்துணை யன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம் காதலை வெறுத்த மனோன்மணி இப்பொழுது காத லின் கரை கண்ட வாணிக்குக் காதலின் இலக்கணத்தை அயன்றோ எடுத்து மொழிகின்றாள்? மேலும் அவள் தருக்க வாதத்தால் காதலை நிலைநாட்ட முடியாதென்றும், நம்பிக்கை அதற்கு மிகுதியும் தேவை என்றும், "நம்பல் என்பதுவே அன்பின் இநிலைமை" என்றும், காதல் முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/271&oldid=856439" இலிருந்து மீள்விக்கப்பட்டது