பக்கம்:மனோன்மணீயம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 மனோன் மணியம் சிறந்த பொருள்களைக் தருக்க வாதத்தால் நிலைநாட்டு வோர் மலரின் மணத்தைக் கையால் அளந்து காண்பவரே என்றும் காதலின் பெற்றியை உள்ளவாறு உரைக்கின்றாள். இதுபோன்றே தவத்தின் வழியே தன் மனம் செல்கிறது. என்று கூறிய அவள், தீய தவத்தின் நிலையினைத் திறம்படக் காட்டுகின்றாள். தவமென்? உணருவை! ". உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து செந்தீ ஐந்திடைச் செறிந்தமைக் துறைதல் ஆதியா ஒதுப அல்ல அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர் என்று குறிப்பிடுகின்ற அவளே, சுந்தர முனிவரிடம் வாசிஷ்டாதி வைராக்கிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து முழுமை கண்டதன் விளைவாகப் புடம் போட்ட தங்கமென மனப்பக்குவம் பெறுகின்றாள். தந்தை தாய் ஆதியா வந்ததன் குடும்ப பந்தபா சத்தினைப் பேணித் தனது சொக்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க்கு எந்தகா ளும்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதல்தவ முனிவர் என்றும், அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யான்இங்கு எடுத்தகல் தவத்தின் இலக்கணம் == என்றும் அவள் தவமாய தவத்தின் இலக்கணத்தைச் சுட்டிக் காட்டும்போது படிப்படியாக அவள் பெற்ற ஆன்மநேயம் வளர்ச்சி புலப்படுகின்றது. எங்கிருங் தனவிவ் வன்றிற் பேய்கள் கஞ்சோ காவிடை? கெஞ்சம் துளைக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/272&oldid=856440" இலிருந்து மீள்விக்கப்பட்டது