பக்கம்:மனோன்மணீயம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணி 271 அன்பது காதல் என்ற காட்டாற்று வெள்ள உணர்ச்சியில் _ண்டுண்ட மனோன்மணியின் கூற்று, கட்டற்ற காதல் வெள்ளம் தணிந்த நிலையில் அவள், ! இரவியை நோக்கற் கேன்விளக் குதவி உண்மையாய் கமதுள முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை ான்று கூறும் கூற்றும் படிப்படியான அவள் மனவளர்ச்சி பிணைத் தெரிவிப்பனவாம். காதலின் தெளிந்த நிலையில் தான் அவள் உள்ளத்தில் நிலையான உறுதி பிறக்கின்றது. அதன் பயனாகப் பிறப்பதுதான், அஞ்சலை அஞ்சலை இதோவென் கெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன் என்ற மனக் திண்மையாகும். இவை எல்லாவற்றிலும் மேலாக, அவள் தந்தைபால் காட்டும் அன்பால், அவன் சொல்லை மீற முடியாமல் தன் அகக்காதலையே பலியிட்டுத் தன்னைத்தானே தியாகம் செய்து கொள்ளும் உயரிய நிலையில்தான் அவள் துாய பண்பு குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளிவிடுகின்றது.

  • உன்னால்தான் யான் உயிர் வாழ்கின்றேன்" என மொழிந்தான் தந்தை ஜீவகன். தனக்கென வாழும் தந்தை பலதேவனைத் தான் மணக்க வேண்டும் என்று கூறிய பொழுது, மாறாது உடன்பட்டாள் மனோன்மணி. அந் நிலையில் அவள் வாயினின்றும் பிறக்கும் மொழிகளை க் காண்க : ي

அன்னையும் கின்னை யன்றி வேறறியேன் உன்னதே இவ்வுடல் உன் திரு வுள்ளம் உன்னிய படியெல்லாம உவப்பச் செய்குவன் அடிமையின் கவலையால் அரசர்க்கு இயல்பாம் கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை அன்பாம் உன்பால் ஐய!உன் மகள் வேண்டும் வரமெலாம் யாண்டும் இவ் ஒன்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/273&oldid=856442" இலிருந்து மீள்விக்கப்பட்டது