பக்கம்:மனோன்மணீயம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 மனோன் மணியம் என்று மரியாதையோடு,அதே நேரத்தில் உள்ள உறுதியோடு அவள் சொல்லினை மறுத்து மொழிகின்றாள். மேலும், இறக்கினும் இசையேன் தாமே துறக்கினும் மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் காடுமோ தானுள வளவுமென் உளமே? எனறு அவள் கூறுவதனின்று காதலே கற்பாகக் கொண்டு வாழும் காதலறச் செல்வியாகவாணி காட்சியளிக்கின்றாள். காதலை முற்ற வெறுத்துத் தவத்தின்மேல்தான் தன் நாட்டம் என்று கூறிய மனோன்மணிக்கு மறுமொழியாக. சின்னாட் செலுமுனங் தேர்குவன் ெேசால் கட்டுரைத் திண்ணம் மட்டள வின்றிக் கதல் காதுவும் காலை ஒதுவை நீயே யுறுமதன் சுவையே என்று கூறுகிறாள். நூலறிவோடு அனுபவ அறிவும் நிறைந் தவள் வாணி என்பது, அவள் கூறியபடியே அன்றிரவே மனோன்மணி காதல் வயப்பட்டுக் கடுந்துயர் கொள்வதி ளிைன்றும் அறியலாம். தன் காதலன் துன்பம் கண்டு அத்துன்பம் தனக்கு வந்ததே போன்று மனங்கலங்கித் தியங்கி மாழ்குகின்றாள் வாணி. நடராசனை மனைவரா வண்ணம் ஒட்டிய சகடரை யும் ஊர்வரா வண்ணம், ஒட்டிய குடிலனையும் நொந்து கொள்வதோடு, மனோன்மணி, நின் காதலையும் நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே" என்று கேட்டபோது, நாணம் தடையிடத் தான் அவனிடம் நடந்து கொண்டமைக்குப் பெரிதும் வருந்தி மொழிகின்றாள் வாணி. அதுவே பயம்! என் உளகின் றறுப்பது வதுவையும் வேண்டிலர் வாழ்க்கையும் வேண்டிலர் ஒருமொழி வேண்டினர், உரைத்திலேன் பாவி கச்சினேன் எனுமொழிக் கேயவர் இச்சை பிச்சியான், ஓகோ பேசினே ரிைலையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/280&oldid=856460" இலிருந்து மீள்விக்கப்பட்டது