பக்கம்:மனோன்மணீயம்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணி 281 பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணிர்க் கன்னி பண்ணிய கிலாநிழற் சிற்றில் பன்முறைசி தைப்பவன் போன்று சிற்றிலை எடுப்ப என மொழியும்பொழுது இயற்கையழகில் உள்ளத்தைக் கொள்ளை கொடுக்கும் அவள் கலையுள்ளம் காண முடிகின்றது. வெளுத்ததெல்லாம் பால் அல்ல: நம்பிக்கையின் அடித் தளத்தில்தான் வாழ்க்கையின் உயிர்நாடி உளது. காதலின் கூறப்பும் நம்பிக்கையின்பாற் படுகிறது. அந்த நம்பிக்கையே உலகை, உய்ந்து வாழ வகை செய்கின்றது. உடலலா லுயிரும் விதியால் உணர்வும் கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக விசனம் என்? அன்றேல் காண்டி அவ்வேளை கருணையின் இயல்பே என்றபடி காதலின் கனிந்த தன்மையை பற்றிக் கொள் கிறாள் வாணி. மனோன்மணிக்கு மணம் முடியும்பொழுதே தன் மணமும் முடியும் என முடிவெடுக்கிறாள். | பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்தான் யாரே யாயினும் ஆகுக'; அவனைநீ அணையும் நாளே அடியேன் மணகாள் இவ்வாறு மனோன்மணிய நாடகத்தில் உண்மைக் காதலின் உயர்வையும், நட்பின் திறத்தையும், பெண்ணின் பெருங் குணத்தையும் ஒருங்கே காட்டும் உத்தமப் பெண் -னாய் வாணி இடம் பெற்று இலங்குகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/283&oldid=856466" இலிருந்து மீள்விக்கப்பட்டது